பீஹாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஒட்டுமொத்த நாடே காத்திருக்கும் இந்த தேர்தலுக்காக முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந் நிலையில், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீஹார் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பீஹார் இளைஞர் ஆணையத்தை அமைக்கலாம் என அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அமைப்பானது மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளித்தல், அவர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அதிகாரம் பெற்ற, திறமையானவர்களாக மாற்ற ஆலோசனைகள் வழங்குவதே இந்த ஆணையத்தின் நோக்கம். மது, போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை தடுக்க திட்டங்கள் வகுப்பதும் ஆணையத்தின் பணிகளாகும்.
மாநிலத்தில் அதிக பெண்கள் பணியிடத்தில் நுழைந்து ஆட்சி, நிர்வாகத்தில் பெரிய பங்கு வகிப்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த ஆணையத்தில் ஒரு தலைவர், இரு துணைத் தலைவர்கள், 7 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். அனைவருமே 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொ
More Stories
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்
18ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்..!
திருப்போரூரில் 9ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்..
ஜூலை 15 ஆம் தேதி முதல் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் தொடக்கம்