சுமார் 471 நாட்கள் சிறையிலிருந்து ஜாமீனில் இருந்து வெளியே வந்து மீண்டும் அமைச்சரானார் செந்தில்பாலாஜி. அவருக்கு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் 2021 முதல் 2023 ம் ஆண்டு வரை மின்சாரத்துறைக்கு டிரான்ஸ்பார்கள் கொள்முதல் செய்த வகையில் 397 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஊழக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தான் பொறுப்பு அறப்போர் இயக்கம் மற்றும் அதிமுக பாமக பகிரங்கப்படுத்தியுள்ளது. மழை விட்டாலும், தூரல் விடவில்லை என்பது போல் செந்தில்பாலாஜியை சுற்றி சுற்றி வருகிறது ஊழல் குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மீண்டும் சிறைவாசம் செல்வதற்கு தயாராக இருக்க வேண்டியவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. கட்சிக்குள் அடக்கி வாசித்தாலும் ஊழல் செய்வதில் அடங்காமல் இருந்து வருகிறார் செந்தில்பாலாஜி. இவருக்கு முதன்மையானவரிடமிருந்து பச்சைக்கொடி காட்டுவது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது என்கிறது அரசு வட்டார தகவல்கள். அரசியல்வாதி தப்பி விடுவார் அதிகாரிகளே உஷாராக இருங்கள்..
- குரு
More Stories
அதிமுக – பாஜக கூட்டணி முறிக்கவும் தயார்..!
செங்கோட்டையன் சமாதானம் நடக்காது
வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இணைய முடியாது…!
எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்…!
நேபாள் துணை பிரதமரை ஆற்றில் தூக்கி வீசிய மக்கள்..!
வாய்ஸ் ஆப் சசிகலா
செங்கோட்டையன் பேட்டி
மனம் திறந்தார் – மர்மம் திறக்கவில்லை…!