சென்னை: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே தமிழ் புத்தாண்டு அன்று தொடங்க இருந்த இந்த யாத்திரை கர்நாடக தேர்தல் காரணமாக தள்ளிப்போனது. தற்போது ஜூலை 9-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுப்பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. தினசரி இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்லும் வகையில் பயணத் திட்டம் தயாராகி வருகிறது. முழுவதுமாக யாத்திரை இல்லாமல் சில இடங்களில் வாகனங்களில் செல்லும் வகையில் பயணத்திட்டம் தயாரிக்கப்படுகிறது. அண்ணாமலை முதற்கட்டமாக 100 நாட்கள் யாத்திரை செல்கிறார். அண்ணாமலையின் யாத்திரை திட்டங்கள் தொடர்பாக வருகிற ஜூன்1-ந்தேதி கட்சியின் உயர்நிலைக் குழு கூடி ஆலோசிக்கிறது. அன்றைய தினமே தி.மு.க.வின் இரண்டாவது ஊழல் பட்டியலும் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் 30 நாட்களும் மோடி 9.0 என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் 9 ஆண்டு சாதனை விளக்க தெரு முனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

More Stories
உத்திரப்பிரதேசத்தைப் பார்த்தாவது திருந்த வேண்டும்!
கி. வெங்கட்ராமன் பொதுச் செயலாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கம்
அறுவடை செய்யப்பட்ட நெல்லில் 40% கூட கொள்முதல் செய்யப்படவில்லை: உழவர்களை கொல்லாமல் கொல்லும் திமுக அரசு! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்
தேர்வை வெல்வோம்..! வாழ்வில் உயர்வோம்..!
மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல்கள்..!
அமைச்சர் சிவசங்கர்
சத்தம் இல்லாமல் சாதனை…!