நடிகர் விஜய் தனியார் கல்லூரி வளாகத்தில் தனது மக்கள் சந்திப்பு கூட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்தினார். கூட்டத்தில் பங்கேற்க 2000 நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஆண், பெண் இரு தரப்புக்கும் சமமான வாய்ப்பு வழங்கிய விஜய் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்த நிலையில் சரியான நேரத்திற்கு கூட்ட மேடையில் தோன்றிய விஜய் வழக்கம் போல் திமுகழகத்தையும், அதன் கட்சி தலைவர்களையும் மறைமுகமாக திட்டி தீர்த்தார்.
கூட்டத்தில் பேசிய விஜய் ஆளுக்கொரு வீடு, வீட்டிற்கு ஒரு மோட்டர் சைக்கிள் இருக்கவேண்டும் என்றும், குறைந்தபட்சம் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று கூறினார். இதைக்கேட்ட கூட்டத்தினர் ஆரவாரம் செய்து கைதட்டி வரவேற்றனர். தனது கட்சியின் கொள்கை என்று பல கருத்துகளை சுட்டிக்காட்டியிருந்தார். அதே நேரம் தமிழ்நாட்டு அரசியலை எவ்வாறு நடத்தவேண்டும் தனது அரசியல் எதிரிகளை எப்படி நடத்தவேண்டும், எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று குறித்து தெளிவான கருத்துகளை எல்லோரும் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு விளக்கி கூறவில்லை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக கரூர் சம்பவம் குறித்து தெளிவான விளக்கத்தை பிறகு கூறுகிறேன் என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார்.
திமுக, பாஜக கட்சி ஆகிய இரண்டையும் விமர்சிக்கும் விஜய் திமுகவை கடுமையாக தாக்கி பேசுகிறார். அதே நேரம் தமிழக வெற்றி கழகம் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக கூறுகிறார். எம்.ஜி.ஆரின் வசனங்களை அடிக்கடி நினைவூட்டுகிறார். ஆனால் திமுகவிற்கு மாற்றாக அதிமுக இடம் பெற்றிருப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். திமுகவிற்கு மாற்று தமிழக வெற்றிக்கழகம் என்பதை அடிக்கடி கூறுகிறார்.
தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் என்று கணக்கு போடுகிறார் தாவெக தலைவர் விஜய். ஆனால் அவரது கணக்கு எடுபடுமா? என்பது போக போக தான் தெரியும்.
கூட்டம் கூடுவதை வைத்து கணக்கு போட்டால் பீகார் மாநிலத்தில் ராகுல்காந்திக்கும் தேஜஸ் வி யாதவ் கூடிய கூட்டம் ஒட்டாக மாறினாலும் வெற்றிக்கு கைகுடுக்கவில்லை. காங்கிரசுக்கு படுதோல்வியையும், ராஷ்டிரிய ஜனதாதள கட்சிக்கு 26 இடங்களையும் வழங்கினார்கள். அதே நேரம் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற தொகுதிகளில் பாதி தொகுதிகளை ராஷ்டிரிய ஜனதாதளம், பாஜக கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் தள்ளப்பட்டு உள்ளது. இதனால் பத்தாவது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றுள்ளார். இவற்றை நினைத்து பார்த்து தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வியூகத்தை அமைப்பதுடன் கூட்டணி குறித்தும் ஆலோசனை செய்து முக்கிய முடிவெடுப்பது அவசியமாகும். இதுமட்டுமல்ல பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது என்பதையும் நினைத்துப் பார்த்து விஜய் அவர்கள் தேர்தலில் கூட்டணி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து எதிர்வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலை எதிர்கொள்வது அவசியமாகும்.
ஒருவாய்ப்பை நழுவவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகள் கட்சியை நடத்தவேண்டும். கட்சியை நடத்துவதில் எத்தகைய சிரமங்கள் நிதி நெருங்கடிகள் உருவாகும் என்பதை காங்கிரஸ் கட்சி நண்பர்களிடம் விஜய் கேட்டு தெரிந்து கொள்ளலாம். திமுக எதிர்ப்பை மட்டும் முன்னிறுத்தி தமிழக அரசியலில் வெற்றிப்பெற இயலாது. இதற்கு உதாரணம் திமுகழகமே ஒரு எடுத்துக்காட்டு.
1967 முதல் 2021 வரை எந்த தேர்தலிலும் திமுக தனித்து தேர்தலை சந்தித்தது இல்லை. கூட்டணி அமைத்து மட்டுமே தேர்தலை சந்தித்துள்ளது. இதையும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நினைவில் வைத்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். 1980 தமிழ்நாட்டில் மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு சுமார் 50 லட்ச வாக்குகளுக்கு மேல் பெற்று 26 இடங்கள் மட்டுமே வெற்றிப்பெற முடிந்தது. அதே நேரம் அதற்கும் குறைவான வாக்குகளை பெற்ற திமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது என்பதும், கடந்த கால வரலாறு. இதையும் நடிகர் விஜய் நினைவில் வைத்துக்கொண்டு தனது அரசியல் முடிவை திட்டமிடுவது காலத்தின் கட்டாயமாகும்.
– டெல்லிகுருஜி

More Stories
பிரதமர் வருகை…
வரவேற்பும்.. புகார்களும்…!
சிலுவை சுமக்கும் காங்கிரஸ்
காலம் கடந்தும் கடைசி வாய்ப்பு..!
இளைய தலைமுறைக்கு புதிய தலைமை யார்..?
சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம்