வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் டிரைலர் (ஜனவரி 4) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது ‘வாரிசு’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த டிரைலரை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

More Stories
இந்திய திரை உலகுக்கு மிகப்பெரிய கவுரவம் அளித்த ஆஸ்கர் விருதுகள்
சார்மினாரில் இயக்குனர் ஷங்கர்.. என்னவா இருக்கும்..!
நானி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்