October 11, 2024

12 முதல் 19-ந்தேதி வரை போதை விழிப்புணர்வு வாரம்: கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளி களில் மாணவ-மாணவிகள் நாளை காலை 10.30 மணிக்கு போதை பொருள் விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை விழிப்புணர்வு வாரத்தை தொடர்ந்து செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. எனவே பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதுபற்றி மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அரசின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.