சென்னை: பொருளாதாரம் ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக வரும் நவம்பர் 12-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டமானது நடைபெற இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
பொருளாதாரம் ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இடஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லும் என தீர்பானது வழங்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வழக்கறிஞர் வில்சன் ஆகியோருடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் ஒத்த கருத்துடைய அனைவரும் இந்த விவகாரத்தில் ஒன்றினைய வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசித்து அனைத்துகட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.