தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் எந்த கூட்டணியிலும் இடம்பெற போவதில்லை. தனித்துத்தான் போட்டி அல்லது தன்னை முதல்வராக ஏற்றுக்கொள்பவருடன் கூட்டணி என்ற அறிவிப்பை பின்பற்றி 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க துணிந்துவிட்டால் வெற்றி என்பது கேள்விக் குறியாகவும் தோல்வி என்பது ஆச்சரியகுறியாகவும் அமைவது உறுதி.
கேள்விக்குறியை பொறுத்தவரை திமுக கூட்டணி கட்சிகள் வாக்குசதவிகிதத்தை எத்தனை சதவிகிதம் தமிழக வெற்றிக்கழகம் பெறப்போகிறது என்பதும் அதேபோல் அதிமுக பாஜக கட்சி தலைமையிலான கூட்டணி வாக்குசதவிகிதத்தை எத்தனை சதவிகிதம் இழப்பை ஏற்படுத்தும் என்பதும் இளைஞர்கள், இளம்பெண்கள் புதிய வாக்காளர்கள், பொதுவாக்காளர்கள் ஆகியோர் வாக்குகளை எத்தனை சதவிகிதம் அளவிற்கு தமிழகவெற்றிக்கழகம் தலைவர் நடிகர் விஜய் வாங்க முடியும். இதன்மூலம் எத்தனை தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிப்பெற இயலும் என்பது கேள்வியாக உள்ளது.
அதேபோல் எந்த கூட்டணியும் இல்லாமல் தனது ரசிகர்களை நம்பியும் பொதுவாக்காளர்களை நம்பியும் மட்டுமே தேர்தல் களத்தில் துணிந்து போட்டியிடலாம். இதன் மூலம் தமிழ்நாட்டின் தனக்கு எத்தனை சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் என்பதை பரிசோதித்து பார்க்கலாம். அதே நேரம் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் வாங்க முடியுமா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும். ஒருவேளை 15 சதவிகிதம் வாக்குமுதல் 20 சதவிகித வாக்குவரை வாங்கினாலும் பதிவான வாக்குகளில் 10000 வாக்குகளில் தொடங்கி 20000, 25000, 30000 வாக்குகள் அடிப்படையில் அதிகப்பட்சமாக அறுபதுலட்சம் முதல் எழுபதுலட்சம் வாக்குகள் மட்டுமே தமிழகவெற்றிக்கழகத்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் பெறமுடியும் என்பது தற்போதைய களநிலவரமாக இருந்துவருகிறது.
இதன்மூலம் திமுக அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் பலரை தோல்வி அடைய செய்யமுடியுமே தவிர தமிழகவெற்றிக்கழக வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றிப்பெற இயலாது. ஆனால் தமிழகவெற்றிக்கழகம் பெறக்கூடிய வாக்குகள் அதிகப்படியாக திமுக கூட்டணி வாக்குகளையே பெறமுடியும். அதேநேரம் அதிமுக, பாஜக கூட்டணி வாக்குகளிலும் குறைந்தப்பட்ச சேதாரத்தை உருவாக்கமுடியும்.
தமிழ்நாடு வாக்களர்கள் எப்பொழுதுமே தேர்தலில் ஆளுங்கட்சி மீது அதிருப்தி ஏற்படுவது உண்டு. அந்த அதிருப்தி வாக்குகள் எதிர்கட்சிகளுக்கு செல்வதற்கு பதிலாக மூன்றாவது அணி கட்சிகளுக்கு சென்றுவிட்டால் ஆளுங்கட்சி வெற்றியின் எண்ணிக்கை என்பது குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரம் நேர்எதிர்கட்சியை£க இருந்து பாஜக கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் கூட்டணிக்கு கூடுதல் இடம் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உருவாகலாம். இது எப்படி இருந்தாலும் மூன்றாவது அணி அமைத்து போட்டியிடும் கட்சிக-ளுக்கு எந்த வகையிலும் வெற்றிக்கானவழியை ஏற்படுத்தி தராது.
கரூர் நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழகவெற்றிக்கழகத்தின் அரசியல் நிலைப்பாடு என்பது சற்றுவேகம் குறைந்து இருந்தாலும் மீண்டும் உத்வேகத்துடன் அரசியல் களத்திற்கு வந்தாலும் விஜய் அரசியல் வேகம் என்பது பல வழிகளில் பலநிகழ்வுகளில் தடுமாற்றத்தையும், சுணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்தாலோ ஆளுங்கட்சியான திமுகவின் எதிர்ப்பை தமிழகவெற்றிக்கழகம் எந்தவகையில் தடுத்து நிறுத்தும் எத்தகைய முயற்சிகள் மூலம் திட்டங்கள் தயாரித்து வெற்றிக்கான பாதையில் கட்சி தொண்டர்களை அழைத்து செல்லும் என்பதற்கான அறிகுறிகள் என்ன என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
கட்சி தலைமை தனது கொள்கையிலும், திட்டங்களிலும் வெளிப்படுத்தவும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் விஜய்யின் தேர்தல் அரசியல் என்பது பல மர்மங்கள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது எப்பொழுது விஜய் மௌத்தைகலைப்பார் மர்மத்தை உடைப்பார் என்பது போன்ற கேள்விகளுக்கு மௌனம் மட்டுமே பதிலாக இருந்துவருகிறது. கரூர் நிகழ்ச்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இதைவிட பெரிய தாக்கத்தை எதிர்கொள்வதற்கு தயாராக இருந்தால் மட்டுமே ஒரு தலைவன் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும். ஒரு நிகழ்வுக்கே எவ்வாறு தாக்குப்பிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தால் தமிழில் ஒரு பழமொழி உண்டு “அறிவாளி யோசித்து முடிவெடுப்பதற்குள், முட்டாள் ஐந்துமுறை வெற்றிப்பெற்று விடுவான்” என்பதுதான் விஜய் விஷயத்திலும் நடந்துக் கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கரூர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட துயர பாதிப்புக்குள்ளான மக்களை விஜய் சந்திக்கவில்லை என்ற குறைப்பாட்டை தற்காலிகமாக அவர் எந்த வழியை கையாண்டாலும் அவர்களுக்கு ஆ-றுதல் கூறியது வரவேற்கத்தகுந்தது பாராட்டுக்குரியது. அதே நேரம் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை அவர்களுக்கு ஆறுதல் கூறாதது பாதிக்கப்பட்டவர்களின் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தாலும் அவற்றையெல்லாம் மறந்துவிட்ட விஜய் அவர்களுக்கு ஆதாரவாக பாதிக்கப்பட்ட மக்கள் குடும்பம் முழுவதும் நின்றுகொண்டிருப்பது விஜய்க்கு கிடைத்த ஆதரவான வெற்றியாக இருக்கலாம். ஆனால் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு புதிய இழப்பீடு வழங்கிவிட்டோம் என்று நினைத்து விஜய் அவர்கள் நிம்மதியாக உறங்கமுடியாது.
அரசியல் என்பது மலர்களால் உருவாக்கப்பட்ட பாதை அல்ல. அது கரடுமுரடான முட்கள் நிறைந்த பாதையாகும். இதில் மனதில் வைத்துக்கொண்டு நடிகர் விஜய் அவர்கள் தனது எதிர்கால அரசியலை திட்டமிடுவது மிக மிக அவசியமாகும். அதேநேரம் தனித்து களம் காண்பது என்பது விஷப்பரீட்சையே தவிர வேறில்லை. தோல்விகளை தாங்கி கொள்ளும் மனப்பக்குவமும் வெற்றியை மட்டுமே நம்பி வாழ்கின்ற வாழ்க்கையும் நீரில் போட்ட கோடுகள் தான். உணர்ந்து கூட்டணி விஷயத்தில் குழப்பம் இன்றி தெளிவான முடிவை தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்டால் நம்பிக்கை ஒளிவீசும். தனித்துப் போட்டி என்றால் எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
– பெ.த.

More Stories
தேவர் ஜெயந்தி திருப்பம் தருமா..?
சீமானின் அரசியல் கணக்கு
முகத்தில் தெரியும் விளக்கு
வெற்றி உதவாது..
தோல்வியை உறுதிப்படுத்தும்..!
உத்திரப்பிரதேசத்தைப் பார்த்தாவது திருந்த வேண்டும்!
கி. வெங்கட்ராமன் பொதுச் செயலாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கம்