டுவிட்டர் பயனர்களின் தரவுகளை கொண்டு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு பயிற்சி அளித்ததாக எலான் மஸ்க் மைக்ரோசாப்ட் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சட்டவிரோதமாக டுவிட்டர் தரவுகளை பயன்படுத்தியற்காக மைக்ரோசாப்ட் மீது வழக்கு தொடரப் போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். “அவர்கள் டுவிட்டர் தரவுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவுக்கு பயிற்சி அளித்துள்ளனர். வழக்கு தொடர்வதற்கான நேரம்,” என்று எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார்.
வொர்ட் மற்றும் எக்சல் போன்ற சேவைகளில் சாட்ஜிபிடி சார்ந்த ஏஐ ஒருங்கிணைக்கப்பட இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஜனவரி மாத வாக்கில் அறிவித்தது. இதோடு சாட்ஜிபிடி சேவையை உருவாக்கிய ஒபன்ஏஐ நிறுவனத்தில் அதிக முதலீடு செய்ய இருப்பதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் பயன்பாட்டுக்கு வந்த சாட்ஜிபிடி சேவை உலகளவில் பேசுபொருளாக மாறியது. பலர் சாட்ஜிபிடி சேவையை புகழ்ந்தும், பலர் இதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். சாட்ஜிபிடி சேவை பயனர் சந்தேகங்களுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கிறது.
More Stories
“அதிகாரம் எனக்கு – பதவி உனக்கு”
தலைவர் ஸ்டாலின் – பொதுச்செயலாளர் துரைமுருகன்
நெருப்பு வைப்பது யார்..?
வன்னியர்கள் கேள்வி–..?
குழப்பத்திற்கு தீர்வு என்ன?
மௌனம் காக்கும் எடப்பாடி
குரலை உயர்த்தும் தொண்டர்கள்…
மூச்சு இருக்கும் வரை… அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி