சென்னை: கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதை செயல்படுத்த இப்போது விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான புதிய ஆன்லைன் மாடல் உருவாக்கப்படும் என்றும் இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகுந்த உத்தரவுகள் அரசு பிறப்பித்துள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
பெங்களூர் டிராபிக்! மெகா திட்டத்தை கையில் எடுக்கும் கர்நாடக அரசு!
மகளிருக்கு வரும் டிசம்பர் 15 முதல் மாதம் தோறும் 1000 ரூபாய்!
உலகின் வலிமையான பாஸ்போர்ட் லிஸ்ட்!