July 15, 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்
18ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 18ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இக்கூட்டம் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் சென்னை அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2025ஆம் ஆண்டின் இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

  • தொ