இன்று மந்திரிகளாக பதவியேற்க உள்ள 43 பேர் கொண்ட பட்டியலில் ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனோவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மோடி 2-வது முறையாக பதவி ஏற்றதற்கு பிறகு மந்திரி சபையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இப்போது முதன்முதலாக மந்திரி சபையில் மாற்றம் செய்யப்படுகிறது. இன்று மாலை மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.
மத்திய மந்திரிகளாக 43 பேர் இன்று பதவியேற்க உள்ளதாக செய்தி வெளியானது. இன்று மந்திரிகளாக பதவியேற்க உள்ள எம்.பிக்கள் பிரதமர் இல்லத்திற்கு வந்தனர். அவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் விரிவாக்கம் செய்யப்படும் மந்திரிசபையில், இன்று மந்திரிகளாக பதவியேற்க உள்ள 43 பேர் கொண்ட பட்டியல் வெளியானது. அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனோவால், ஹர்தீப் சிங் புரி, வீரேந்திர குமார், ஆர்.பி. சிங், கிஷன் ரெட்டி, மீனாட்சி லேகி, அஜய் பட், அனுராக் தாகூர் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன. ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் பராசும் மத்திய மந்திரி ஆகிறார்.
More Stories
“அதிகாரம் எனக்கு – பதவி உனக்கு”
தலைவர் ஸ்டாலின் – பொதுச்செயலாளர் துரைமுருகன்
நெருப்பு வைப்பது யார்..?
வன்னியர்கள் கேள்வி–..?
குழப்பத்திற்கு தீர்வு என்ன?
மௌனம் காக்கும் எடப்பாடி
குரலை உயர்த்தும் தொண்டர்கள்…
மூச்சு இருக்கும் வரை… அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி