ஹீரோ நிறுவனம், புதிய டெஸ்டினி 110 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 110 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8.1 ஹெச்பி பவர், 8.8 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டரில் புரொஜெக்டர் எல்இடி ஹெட்லைட், எச் வடிவ எல்இடி டெயில் லைட்கள் என வடிவமைப்புகள் பெரும்பாலும் டெஸ்டினி 125 ஸ்கூட்டரை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் VX மற்றும் ZX என ஹீரோ டெஸ்டினி 110, 2 வேரியண்ட்களில் கிடைக்கும். இரு வேரியண்ட்களில் VX வேரியண்ட்டில் எல்சிடி டிஸ்பிளே உள்ளது. இதன் விலை ரூ.72 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் மூன்று நிறங்களில் வருகின்றன. ZX வேரியண்டிலும் 3 நிறங்களில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.79 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தொ
More Stories
‘சென்னை ஒன்’ செயலியில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம்
காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை – ரிசர்வ் வங்கி அதிரடி
யு.பி.ஐ. பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு: