சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது.
இதையடுத்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தின் கீழான பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்வதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்தன.
மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவை தவிர பெரும்பாலான மாநிலங்களில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.
இதேபோல மாநிலங்களில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மாநில அரசுகளுக்கு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடும் முறையை அடுத்த 10 நாளில் மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் ஜூலை 31-ந்தேதிக்குள் மதிப்பெண்களை மாநில அரசுகள் வெளியிட வேண்டும்.
More Stories
அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.1 கோடி செலவில் முன்னோடித் திட்டம்:
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
கரூர் சம்பவம் போல் இனி எங்கும் நிகழக்கூடாது:
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
வருவாய் பற்றாக்குறையில் இரண்டாமிடம்:
உத்தரப்பிரதேசத்தை விட 26 இடங்கள் பின்தங்கிய தமிழ்நாடு,
நிர்வாகம் தெரியாத திமுக அரசு!-
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்