கோவையில் இயற்கை விவசாயிகளின் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் பீகார் மாநில தேர்தல் முடிவை ஒப்பிட்டு பேசி தமிழக அரசியல் களத்தை உசுப்பிவிட்டிருக்கிறார். குறிப்பாக திமுகவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது பிரதமர் மோடியின் பேச்சு. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் அதிகளவில் கூடியிருந்தார்கள். அதே போல் தமிழக ஆளுநரும் பிரதமரை வரவேற்க காத்திருந்தார். கட்சி சார்பில் பாஜக கட்சி பிரமுகர்களும், ஏராளமான தொண்டர்களும் பிரதமரை வரவேற்க காத்திருந்தார்கள். சற்று காலதாமதமாக பிரதமரின் விமானம் கோவை விமானநிலையம் வந்தடைந்தது. இதற்கிடையில் விஜபி அறையில் அமர்ந்து இருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டு தமிழக அரசியல் குறித்து பேசியதோடு அதிமுக தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்தும் பேச்சை தொடங்கினார்கள். இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் எடப்பாடி பழனிசாமி.தோழமை கட்சிகளான தமிழ்மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன், ஐ,ஜெ.கே.கட்சியின் பாரிவேந்தன், புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் பிரதமரை வரவேற்க காத்திருந்தார்கள்.
பாஜக கட்சி சார்பில் மாநில தலைவர் நைனார்நாகேந்திரன் முன்னால் தலைவர் அண்ணாமலை உள்பட பலர் காத்திருந்தனர். பிரதமரை மோடியை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கோரிக்கை மனுவை அளித்ததோடு பல்வேறு புகார்களை திமுக அரசு மீது எடுத்துக் கூறியதோடு தமிழ்நாட்டில் திமுகவின் செல்வாக்கை குறைப்பது எப்படி என்பது குறித்தும், எடுத்துக் கூறினார். மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதையும் பல அமைச்சர்கள் மீது ஊழல் புகார் விசாரணை நிலுவையில் இருப்பதையும், பிரதமருக்கு நினைவூட்டினார். அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் காமராஜர் பாணியில் ஆகட்டும் பார்க்கலாம் என்று கூறியதோடு, எடப்பாடியை உற்சாகப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
அதே போல் பிரதமர் மோடியை வரவேற்க கோவை விமானநிலையம் வந்துள்ள மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பிரதமரை வரவேற்ற கையோடு தனது பங்கிற்கு மாநில அரசின் தற்போதைய நிலை குறித்தும், திமுக அரசின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் பிரதமரிடம் எடுத்துக்கூறி தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்ட மீறல்களையும், அதிகார தூஷ்பிரயோகம் நடப்பதையும், தெளிவாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூறியுள்ளார். அவை அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரதமர் இயற்கை விவசாயிகள் குறித்தும் பிரதமருக்கு எடுத்து சொன்னதுடன் தனது கடமையை முடித்துக் கொண்டார்.
பிரதமரின் கோவை விசிட் குறித்து தமிழக பாஜக கட்சியினரும் பிரதமரை வரவேற்று தங்கள் பங்கிற்கு தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் நிலைகளை எடுத்துக் கூறியுள்ளார்கள். பிரதமரின் தமிழ்நாட்டு பயணம் என்பது விவசாயிகளை உற்சாகப்படுத்தியதோடு பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து பேசியிருப்பது திமுகழகத்திற்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியதுடன் அதிமுக கூட்டணியை வலுப்படுத்துவதற்கான ஒரு செய்தியையும், உணர்த்தியுள்ளது என்கிறார்கள் பாஜக கட்சியில் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள்.
- டெல்லிகுருஜி

More Stories
தமிழக அரசியல் வரலாறும்…
விஜய்யின் வெற்றி கணக்கும்..!
சிலுவை சுமக்கும் காங்கிரஸ்
காலம் கடந்தும் கடைசி வாய்ப்பு..!
இளைய தலைமுறைக்கு புதிய தலைமை யார்..?
சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம்