சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் புதிய திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்
பாஜகவுடன் கூட்டணி முறிவு என்பது ஏற்கனவே அறிவித்ததுதான். தொண்டர்களின் உணர்வுக்கு இணங்கவே பாஜகவுடன் கூட்டணி முறிவு என முடிவு எடுக்கப்பட்டது. பாஜகவுடன் கூட்டணி இல்லையென எடுக்கப்பட்ட முடிவில் அதிமுக உறுதியாக உள்ளது. பல தொகுதிகளில் அதிமுகவினர் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தனர். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏல்-க்கள் தொகுதி பிரச்சனைக்காகவே சந்தித்தனர். முரண்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். காவிரி நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.. காவிரியில் உரிய நீரை பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
More Stories
அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.1 கோடி செலவில் முன்னோடித் திட்டம்:
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
கரூர் சம்பவம் போல் இனி எங்கும் நிகழக்கூடாது:
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
வருவாய் பற்றாக்குறையில் இரண்டாமிடம்:
உத்தரப்பிரதேசத்தை விட 26 இடங்கள் பின்தங்கிய தமிழ்நாடு,
நிர்வாகம் தெரியாத திமுக அரசு!-
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்