[responsivevoice_button voice=”Tamil Male”]சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று ஆர்.எஸ்.பாரதி திமுக பிரமுகர் பேசும் பொழுது பத்திரிகையாளர் குறித்து பேசியது சரியா தவறா என்று விவாதிக்காமல் அவர் வெளிப்படுத்திய விதத்தில் உள்ள நியாயத்தை மறுப்பதற்கில்லை. பத்திரிகையாளர்கள் அல்லது செய்தியாளர்கள் செய்திகளை தான் தரவேண்டுமே தவிர செய்தி ஆகிவிட கூடாது என்பதை உணர்ந்து தங்கள் ஜனநாயக கடமையை முழுயாக நடைமுறைப் படுத்த வேண்டும்.
வேண்டியவர் வேண்டாதவர் என்று பார்த்து செய்திகளை வெளியிட்டு செய்தித்தாள் நிறுவனங்களுக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் ஒருவிதமான நெருடலை ஏற்படுத்தி அரசியல் கட்சிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியையும், ஆச்சரியத்தையும் உருவாக்கி விட கூடாது. எத்தனையோ பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையையும் செய்திகளையும் நேர்மையாக வழங்கினாலும் சில நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப செய்திகளில் மாற்றம் செய்து வெளியிடுவது இயற்கையான ஒன்று தான் இத்தகைய நடைமுறை தமிழ்நாட்டில் சமீபகாலமாக அதிகளவில் நடைபெறுகிறது. ஒருசில செய்தியாளர்கள் நிரந்தரமாகவே செய்திக்கு பதில் செய்தி ஆகவே மாறிவிடுகிறார்கள். அத்தகைய நிலையை கண்கூடாக பார்க்கும் பொழுது பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து எதிர்ப்புக் கூரல் எழுவதும் நியாயமானதே.
தொலைக்காட்சி விவாதங்கள், பல கோணங்களில் செய்தியாளர்களையே அழைத்து தங்கள் கருத்துக்களை கேட்பதும், அந்த விவாதங்களில் அரசியல் கட்சி சார்ந்த நபர்களையும் அழைத்து பங்கேற்க செய்வதும், சில நேரங்களில் நடுநிலையானவர்களை அழைத்து கருத்துக்களை பதிவு செய்வதிலும் இந்தி, ஆங்கில தொலைக்காட்சிகளை மீஞ்சுகின்ற அளவில் தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள், தமிழ் செய்தித்தாள்கள், அதிகப்படியான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. சில நேரங்களில் பத்திரிகையாளர் என்ற முறையில் அந்த நிகழ்ச்சிகளை காணும் போது கருத்துக்களை செய்தியாக வெளியிடுவதற்கு பதிலாக விவாதத்தில் பங்கேற்கும் விருந்தினர்கள் ஒருவருக்கொருவர் போடுகின்ற கூச்சம், நெறியாளர் கட்டுப்படுத்த இயலாமையையும் பார்க்க முடிகிறது. ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாக விவாதங்களில் பங்கேற்கும் 4,5 பேர்களால் எப்படி துல்லியமாக கணித்து கூறமுடியும் என்ற கேள்வியும் எழுகிறது.
பல பத்திரிகையாளர்கள் காவல்துறையினராலும், ஆளுங்கட்சியாலும் பாதிப்புக்கும் இழப்புக்கும் ஆளாவபோதெல்லாம் வளர்ந்துவிட்ட பத்திரிகை நிவறுவனங்கள், கண்டுக்கொள்வதே இல்லை என்பது தான் நிஜம். சமீப காலமாக போலி நிருபர்களும், உண்மையான பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர்களும், செய்திகள் சேகரிக்க செல்வதும் பொழுது செய்திக்குபின் நடைமுறைப் சம்பவங்களை நேரிலும், வாட்ஸ்அப் மூலமும் பார்க்கும் பொழுது அருவருப்பாகவும், அவசியமற்ற செய்தியாக விளங்குகின்றது. ஆகவே பொது பத்திரிகைகளும் நிறுவனங்களும், அதில் பணிபுரியும் மூத்த பத்திரிகையாளர்களும், தங்களை மட்டும் பாதுகாத்து கொள்ளும் நிலை காணமுடிகிறது. சிறு பத்திரிகைகள் வார இதழ், மாத இதழ் வாரம் இருமுறை அல்லது தினசரி நாளேடுகள் போன்ற சிறுகுறு பத்திரிகைகள் நிறுவனங்களுக்கு பணிபுரியும் அரசின் சார்பில் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஆதரவு கூட கிடைப்பதில்லை.
ஆனால் இத்தகைய செயல்களுக்கு வளர்ந்த பத்திரிகைகளோ அல்லது நீண்ட காலமாக நடைபெற்று வரும் நாளேடுகளின் நிறுவனங்களின் சார்பிலோ, அல்லது ஊழியர்களின் சார்பிலோ எந்தவித குரலும், பாதுகாப்பும் கிடைப்பதில்லை. அது அவரவர் விருப்பம் என்றாலோ எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகின்றதோ சட்டப்படியான உரிமைகள் மறுக்கப்படுகின்றதோ அல்லது சகஊழியர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்களோ அப்பொழுதெல்லாம் நியாயத்தின் பக்கம் நின்று போராடுவதே ஒவ்வொரு பத்திரிகையாளர்களின் கடமையாகும். அரசின் தவறுகளை தட்டி கேட்கும் அதிகாரம் படைத்த பத்திரிகையாளர்கள் அரசினால் ஏற்படும் தவறுகளை சுட்டிக் காட்டும் பொழுது பொதுமக்களுக்காக போராடுவது போல் சக பத்திரிகையாளர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் குரல் எழுப்பி அவர்கள் உரிமையை பாதுகாப்பதும் ஒவ்வொரு பத்திரிகையாளர்களின் கடமை என கருத-வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
இந்த நிலையை பார்க்கும் பொழுது இந்துக்களுக்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகம் செயல்படுவதை போல் ஒரு தோற்றத்தை உருவாக்கும் பொழுது அதனால் தங்கள் அரசியலுக்கு இழப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். குறிப்பாக பத்திரிகையாளர்களே அத்தகைய முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது ஆர்.எஸ்.பாரதி திமுக (எம்.பி) அவரது கோபம் வடநாட்டவர்கள் மீதும் தென்னாட்டவர் மீதும் திரும்பியதோடு பத்திரிகையாளர் பக்கமும் திரும்பி விட்டது. உள்ளபடியே அவரின் பேச்சின் முழு விவரத்-தின் பேச்சை கேட்கும் பொழுது திமுகவினர்கள் அதிக அளவில் கோயிலுக்கு செல்லும் பொழுது ஆலய தரிசனத்தின் போது 100 ரூபாய் முதல் 500 ஆயிரம் என்று ஐயர்களுக்கு வழங்குவதாகவும் கூறியுள்ளார். இதை பார்க்கும் பொழுது மெல்ல மெல்ல திராவிட முன்னேற்ற கழகத்தினர் கடவுள் மறுப்பு கொள்கையிலிருந்து கடவுளை ஏற்றுக்கொண்டு விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆகவே ஆலந்தூர் பாரதி அவர்கள் பேசியதில் எந்தவித தவறும் இருப்ப-தாக யாரும் கருதவேண்டிய அவசிய-மில்லை. அதே நேரம் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் பேச்சு மொழி ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பத்திரிகையாளர்களையும் இணைத்துப் பேசி பிரச்சனையை தோற்றுவிக்காமல் இருந்திருக்கலாம்.
ஜாதியை குறிப்பிடும் பொழுதும், மொழியை குறிப்பிடும் பொழுதும் சில நேரங்களில் பார்ப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் கோபம் வரத்தானே செய்யும். அரசியலை அரசியலாக பேசுவது நல்லது. பத்திரிகை யாளர்களுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதோ அல்லது அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள், உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் சமுதாய சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், இவர்கள் எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி இருப்பதில்லை. “பனைமரத்தின் கீழ் நின்று பால் குடித்தாலும்…… உள்ள நிலை தான்” பத்திரிகையாளர் நிலை.
இதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். இதுதான் என் கருத்து!! – ஆர்.பன்னீர்செல்வம்
More Stories
இளைஞர்களை அணி திரட்டுகிறார்
பண்ருட்டி வேல்முருகன்
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?