ரெயில் கட்டணம் உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதே சமயம் புறநகர் ரெயில் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் தற்போது உயர்த்தப்படவில்லை. மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் 2ஆம் வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்புக்கு கி.மீ.-க்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரெயில்களின் அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சாதாரண ரெயில்களின் இரண்டாம் வகுப்பு கட்டணம் 500 கி.மீ. வரை உயர்த்தப்படவில்லை. அதே சமயம் 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணிப்பவர்களுக்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் அரை பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 1500 கிமீ தூரம் பயணம் செய்பவருக்கு டிக்கெட் கட்டணம் ரூ.5 அதிகரிக்கும். ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் ரெயில் கட்டணம் சிறிதளவு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்பதால் பயணிகளை பெரிய அளவில் பாதிக்காது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தெ
More Stories
மேட்டூர் அணையில் இருந்து 48 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
பொங்கல் பண்டிகை: பஸ் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது!
புத்தாண்டு வாழ்த்துக்கள்