தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட ஒ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி.தினகரன், சசிகலா நால்வர் கூட்டணியும் ஒரு சபதம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியை நாங்கள் அமைப்போம். அது என் தலைமையில் அமைக்கப்படும் என்று பகிரங்கமாக சசிகலா செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்துள்ளார். அதே தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று உள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் செய்தியாளர்களை சந்தித்த போது இவர்கள் அனைவரும் திமுக ஆதரவு நிலையில் செயல்படுகிறார்கள் என்பதை நாம் எப்பொழுதே தெரிவித்துள்ளேன். அது இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்தள்ளது. தெய்வதிருமகன் தேவர் ஜெயந்தியில் யார் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம் அதற்கு தடை கிடையாது என்று கூறியுள்ளார்.
அதிமுக கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார். மேலும் கூட்டணி குறித்து தமிழகவெற்றிக்கழகத்துடன் நாங்கள் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவர்களும் தவெகவினரும் எங்களுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று கூறியுள்ளார். தேவர் பூமியில் திருப்பம் வருமா? சசிகலா. ஒ.பி.எஸ் விருப்பம் நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..! செங்கோட்டையன் மீது நடவடிக்கை பாயுமா..?

More Stories
விஜய் தனித்துப்போட்டி தோல்வி நிச்சயம் உறுதி..! திமுக – அதிமுக ஆதாயம் யாருக்கு?
சீமானின் அரசியல் கணக்கு
முகத்தில் தெரியும் விளக்கு
வெற்றி உதவாது..
தோல்வியை உறுதிப்படுத்தும்..!
உத்திரப்பிரதேசத்தைப் பார்த்தாவது திருந்த வேண்டும்!
கி. வெங்கட்ராமன் பொதுச் செயலாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கம்