தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் நேற்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும் , அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்கள், திரைப்படம் மற்றும் ஊடகத் துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடி இருக்கும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவு மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை ஊக்குவிக்கிறது. பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுப்போம்.
More Stories
அதிமுக – பாஜக கூட்டணி முறிக்கவும் தயார்..!
செங்கோட்டையன் சமாதானம் நடக்காது
வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இணைய முடியாது…!
எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்…!
நேபாள் துணை பிரதமரை ஆற்றில் தூக்கி வீசிய மக்கள்..!
வாய்ஸ் ஆப் சசிகலா
செங்கோட்டையன் பேட்டி
மனம் திறந்தார் – மர்மம் திறக்கவில்லை…!