புதுடெல்லி: வளர்ந்த நாடுகளுக்கும், வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளை கொண்ட ஜி20 அமைப்பு உள்ளது. இந்த ஜி20 அமைப்பில் உள்ள இருபது நாடுகளில் சுழற்சி முறையில் ஆண்டு தோறும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு (2023) ஜி20 மாநாட்டை நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10-ந்தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக நாடுமுழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னேற்பாடு கூட்டங்களை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கிறார்கள். 40 கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் ஜி20 மாநாடு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ஜி20 மாநாட்டுக்கான திட்டங்கள் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
More Stories
“அதிகாரம் எனக்கு – பதவி உனக்கு”
தலைவர் ஸ்டாலின் – பொதுச்செயலாளர் துரைமுருகன்
நெருப்பு வைப்பது யார்..?
வன்னியர்கள் கேள்வி–..?
குழப்பத்திற்கு தீர்வு என்ன?
மௌனம் காக்கும் எடப்பாடி
குரலை உயர்த்தும் தொண்டர்கள்…
மூச்சு இருக்கும் வரை… அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி