தமிழக சட்டசபையில் இன்று சுற்றுலாத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் மதிவேந்தன், துறைசார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது சென்னை மெரினா கடற்கரையில், ராயல் மெட்ராஸ் யாட் கிளப் உடன் இணைந்து படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவில் கண்டுகளிக்கும்படி ஒளியூட்டப்படும், தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும், பிச்சாவரம் சுற்றுலா தலம் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மதிவேந்தன் அறிவித்தார்.
More Stories
பெங்களூர் டிராபிக்! மெகா திட்டத்தை கையில் எடுக்கும் கர்நாடக அரசு!
மகளிருக்கு வரும் டிசம்பர் 15 முதல் மாதம் தோறும் 1000 ரூபாய்!
உலகின் வலிமையான பாஸ்போர்ட் லிஸ்ட்!