சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர்களை கௌரவப்படுத்தினார்கள். அப்பொழுது அக்னிமலர்கள் ஆசிரியர் ஆர்.பன்னீர்செல்வம் அவர்களுக்கு மூத்த பத்திரிகையாளர் பகவான்சிங் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். உடன் பத்திரிகையாளர் மன்ற தலைவர் சுரேஷ் வேதநாயகம், செயலாளர் ஆசிப் மற்றும் மன்ற நிர்வாகிகள் அருகில் உள்ளனர். (15.11.2025) அன்று ஜானகி எம்.ஜி.ஆர் கலைஅறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. மன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மூத்த பத்திரிகையாளர்களும், ஏராளமான உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் அக்னிமலர்கள் தெரிவித்து கொள்கிறது.

More Stories
பீகார் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல்காந்தியின் கருத்து
4 மாநில பா.ஜனதா தலைவர்கள் மாற்றம்- ஜே.பி.நட்டா அதிரடி
சிறுதானிய உற்பத்தியை பெருக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு