பாமக கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களும், தொண்டர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சி தலைவராக அன்புமணி இராமதாஸ் பொதுச்செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பொதுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள்இடஒதுக்கீட்டை திமுக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதை உடனடியாக வழங்க வேண்டும். கூடவே சாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் நடத்துவதற்கு முன்வர வேண்டும் என்று திமுக அரசை கேட்டுக் கொள்வதுடன் இடஒதுக்கீடு பெறுவதற்கான போராட்டம் விரைவில் சிறைநிரப்பு போராட்டம் அறிவிக்கப்படும்.
திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நடைப்பயணம் தொடர்ந்து நடைப்பெறும். நடைப்பயணத்தின் போது தம்பிமார்கள் என்னை சூழ்ந்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அப்பொழுது தான் பொதுமக்கள் என்னை பார்க்க முடியும். ஆகவே தம்பிமார்கள் பொதுமக்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்று நடைப்பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். அய்யாவின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து பாமக கட்சி தலைவர் என்ற முறையில் பணியாற்ற கடமைப்பட்டுள்ளேன். அய்யாவோடு எனக்கு இணைந்து பணியாற்றுவதற்கு எந்த தயக்கமும் இல்லை, பிடிவாதமும் இல்லை. ஆனால் உறுதியாக நின்று கட்சியை வழிநடத்தி வருகிறேன் என்று கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் அன்புமணி இராமதாஸ். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- டெல்லி குருஜி
More Stories
அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.1 கோடி செலவில் முன்னோடித் திட்டம்:
தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
கரூர் சம்பவம் போல் இனி எங்கும் நிகழக்கூடாது:
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
வருவாய் பற்றாக்குறையில் இரண்டாமிடம்:
உத்தரப்பிரதேசத்தை விட 26 இடங்கள் பின்தங்கிய தமிழ்நாடு,
நிர்வாகம் தெரியாத திமுக அரசு!-
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்