July 30, 2025

எதிரிகளை எண்ணிப் பார்த்து ஒன்று கூடுங்கள்…

1996 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் செல்வி ஜெயலலிதா அவர்களின் எதிர்ப்பலை காரணமாக திமுக இமாலய வெற்றி அடைந்தது

தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி

தாரமங்கலம். பென்னகரம். எடப்பாடி. ஆண்டிமடம்.
ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி அடைந்தது

இதைத் தவிர்த்து புவனகிரி காட்டுமன்னார்கோயில் ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் சோளிங்கர் தர்மபுரி உள்ளிட்ட 20 சட்டமன்றத் தொகுதியில் இரண்டாம் இடத்தை பெற்றது

வெற்றி பெற்ற அந்த நான்கு தொகுதிகளில் தற்பொழுது தாரமங்கலம் ஆண்டிமடம் தொகுதியே இல்லாமல் போய்விட்டது

எடப்பாடி பென்னாகரம் தொகுதி மட்டும் நடைமுறையில் உள்ளது இந்த நான்கு தொகுதிகளையும் பாமக தனித்து வெற்றியடைந்த காரணத்தினால்

ஆட்சியாளர்களின் ஏவல் காரணமாக வன்னிய விரோத மனப்பான்மை கொண்ட அரசு அதிகாரிகள் அந்த நான்கு தொகுதிகளையும் மறு சீரமைப்பு என்ற பெயரில் சின்னாபின்னமாக்கி விட்டனர்

பென்னாகரம் தொகுதியில் பாமக வலுவாக உள்ள பல ஊராட்சிகளை அடுத்த தொகுதியில் சேர்த்து விட்டு அந்த தொகுதியில் உள்ள பாமகவிற்கு எதிரான வாக்குகளை பென்னாகரம் சேர்த்து தொகுதியை சீர்குலைத்தனர்

எடப்பாடி தொகுதியில் பாமகவிற்கு பலமாக இருந்த இடங்கண் சாலை பேரூராட்சியை

நகராட்சியாக தரம் உயர்த்தி சங்ககிரி தொகுதியில் சேர்த்து பாமகவை பலம் இழக்க செய்தனர்

தாரமங்கலம் ஆண்டிமடம் இரு தொகுதிகளையும் இல்லாமலேயே ஆக்கி சக்தி வாய்ந்த பாமக வாக்குகளை சிதறடித்து பாமகவை வலுவிழிக்க சாதுரியமான வழித்தடத்தை கையாண்டனர்

இது மட்டுமா அந்த தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த 20 கும் மேற்பட்ட தொகுதிகளையும் அடுத்தடுத்த தேர்தலில் அவை வெற்றி பெறாத வண்ணம் தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் பாமகவுக்கு சாதகமான வாக்கு வங்கி உள்ள ஊராட்சிகளை தொகுதியிலிருந்து நீக்கியும்

அடுத்த தொகுதியில் பாமகவுக்கு எதிரான வாக்குகளை கொண்ட ஊராட்சிகளை கண்டறிந்து அதனை சேர்த்தும் பாமகவின் வெற்றியை சிதறடித்தனர்

உதாரணமாக கடலூர் மாவட்டம் புவனகிரி பாமகவுக்கு மிகவும் சாதமான வாக்குகளை கொண்ட தொகுதியாக இருந்தது அந்த தொகுதியில் இருந்து பாமகவின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கோடு பல ஊராட்சிகளை நீக்கியும் எதிரான வாக்குகளை சேர்த்த னர் அதேபோன்று ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பல ஊராட்சிகளை அரியலூர் சட்டமன்றத்தில் சேர்த்து அங்கும் வெற்றியை தடுத்து நிறுத்தினர்

இந்த சகுனி வேலை நடைபெறாமல் இருந்திருந்தால் 2016 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாமக குறைந்தது தனித்து 30 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும்

சகுனி வேளையும் பார்த்துவிட்டு பாமக அழிவு பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று ஊடகங்கள் வாயிலாக தொடர் வதந்தீ பிரச்சாரங்களை செய்து வருகின்றன

ஒரு பெரும் சமுதாயத்தின் அடையாளமாக விளங்கும் பாமகவை அழிக்கும் நோக்கோடு கண்ணுக்குத் தெரியாத பல எதிரிகள் வட்டமிட்டுக் கொண்டுள்ளனர்

அவை எந்தெந்த உருவத்தில் நடமாடிக் கொண்டிருக்கின்றன என்பதை ஆராய வேண்டும் பாமக இளைஞர்கள்

அதை விடுத்து அடுத்தடுத்த கட்சியில் நடக்கும் நிறைகுறைகளை நீங்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறீர்கள் அறியாமையின் காரணமாக

வன்னியர் சமூகத்தையும் அதன் அடையாளமாக விளங்கும் பாட்டாளி மக்கள் கட்சியை தமிழகத்தில் எந்த ஒரு கட்சியோ அல்லது சமுதாயமுமோ ஒருபோதும் மறந்தும் கூட ஆதரித்தது இல்லை ஆதரிக்கப் போவதுமில்லை

அவர்களுடைய தேர்தல் வெற்றிக்காக உங்களை கூட்டணி சேர்ப்பார்கள் அவர்கள் அதன் மூலம் வெற்றி அடைவார்கள் நீங்கள் அதன் மூலம் பல வகையில் பலவீனம் அடைவீர்கள்

இதுதான் உண்மை நிலை
அவன் அள்ளி கொடுத்தான்
இவன் கில்லி கொடுத்தான் என்று நீங்களே தனக்குத்தானே சமாதானம் செய்து கொள்ளும் முயற்சியை முதலில் கைவிடுங்கள்

உங்களுக்கு எவனும் அல்லியும் கொடுக்கவில்லை கில்லியும் கொடுக்கவில்லை

ஒரு சில ஆதாயம் பெற்றது மருத்துவர் அய்யா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்ட குணத்தால் மட்டுமே என்பதை உணருங்கள்

உங்களின் சக்தி வாய்ந்த வாக்குகளை வைத்துக்கொண்டு பல பெருச்சாளிகள் தப்பித்து இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்

எனவே வன்னியர் இளைஞர்களாகிய நீங்கள் உங்களை முதலில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்

முதலில் நீங்கள் புது சட்டை போடுங்கள் வேறு நபர்களுக்கு போட்டு அழகு பார்க்க முயற்சிக்காதீர்கள் அத்தகைய செயல்

“விழலுக்கிறைத்த நீர் ஆகும் “

இது போன்ற எண்ணற்ற இன்னல்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் நடைமுறையில் உள்ளன

எனவே வன்னியர்களுக்கும் பாமக வினருக்கும் எதிரிகள் எந்தெந்த உருவில் இருக்கிறார்கள் என்பதை முதலில் கண்காணிக்க வேண்டியது பாமக தலைமையின் கடமை மட்டுமல்ல ஒவ்வொரு வன்னியர்களின் கடமையாகும்.

மணலூர் க.சுந்தர்ராஜன் – ப.பி