சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து குகேஷூக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை திரும்பிய குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது குகேஷூக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருந்தார். இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இச்சந்திப்பின்போது ககுகேஷிற்கு அழகான வாட்ச் ஒன்றையும் பரிசாக சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
More Stories
அவதார்’ 3வது பாகத்தின் புதிய போஸ்டர் வெளியானது – டிரெய்லர், ரிலீஸ் தேதி அப்டேட்
வெளியாகும் கூலி பட அப்டேட்
சூர்யாவின் கங்குவா திரைப்பட விமர்சனம்