தமிழ்நாட்டில் வார விடுமுறையை ஒட்டிகோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்துடன் பலர் சுற்றுலாத்தளங்களுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் உதகையில் கோடை விழாவை ஒட்டி வருகை தந்துள்ள மக்கள் உதகை நகரம் உருவாகி 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
குறிப்பாக கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பல வித வனவிலங்குகள், பறவைகள், இயற்கையின் எழில் மிகு காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறையை ஒட்டி கொண்டாட வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் தூண்பாறை பகுதியில் யானைகள் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள தூண்பாறை, மோயர் சதுக்கம், குணா குகைக்கு ஏராளமான மக்கள் வருகை தருவர். இதனால் அவர்களை ஈர்க்கும் விதமாக வனத்துறை சார்பில் யானை சிற்பங்கள் மற்றும் நுழைவு வாயில் பகுதியில் இயற்கை சார்ந்த ஓவியங்களும் தீட்டப்பட்டு வருகின்றன.

More Stories
பெங்களூர் டிராபிக்! மெகா திட்டத்தை கையில் எடுக்கும் கர்நாடக அரசு!
மகளிருக்கு வரும் டிசம்பர் 15 முதல் மாதம் தோறும் 1000 ரூபாய்!
உலகின் வலிமையான பாஸ்போர்ட் லிஸ்ட்!