அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், “எங்கள் மீது இஸ்ரேல் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்” என்று ஈரான் நாட்டின் ராணுவ அதிகாரி ஜெனரல் மொஹ்சென் ரெசா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் ஈரான் ராணுவ அதிகாரியின் கருத்தை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
More Stories
அதிமுக – பாஜக கூட்டணி முறிக்கவும் தயார்..!
செங்கோட்டையன் சமாதானம் நடக்காது
வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இணைய முடியாது…!
எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்…!
நேபாள் துணை பிரதமரை ஆற்றில் தூக்கி வீசிய மக்கள்..!
வாய்ஸ் ஆப் சசிகலா
செங்கோட்டையன் பேட்டி
மனம் திறந்தார் – மர்மம் திறக்கவில்லை…!