March 16, 2025

ஷாருக்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக வலம் நயன்தாரா, ஷாருக்கான் படத்தின் மூலம் முதல்முறையாக பாலிவுட்டில் என்ட்ரியாக இருக்கிறார்.


‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.