September 18, 2024

மோசமான நிர்வாகம் ஊழலுக்காக கடன் வாங்கிய பார்ட்டி வேலுமணியை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் தங்கமணியும் வலையில் சிக்குகிறார்

கடந்த சு0புபு&லிருந்து தொடங்கிய அதிமுக ஆட்சி சு0சுபு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. இந்த இடைப்பட்ட பு0 ஆண்டு காலத்தில் 5 லட்சத்து 77 கோடி தமிழக அரசின் கடன் என்பதை தோலுரித்துக் காட்டுகிறது திமுக ஆட்சியின் பு00 நாளில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை ரிப்போர்ட்.

குறிப்பாக உள்ளாட்சி துறை, மின்சாரத்துறை, பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய 4 துறைகளிலும் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாகவும் இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் நிர்வாக திறனற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தங்கமணி, வேலுமணி ஆகியோர் என்பதை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வெள்ளை அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இவை தவிர கடந்த அதிமுக ஆட்சியில் பு0க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீதும் ஊழல் கரை படிந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக ஆளுனரிடம் அளித்த ஊழல் புகார் பட்டியல் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று இன்றுடன் பு00 நாட்கள் கடந்து விட்டது. இந்த பு00 நாட்களில் கரெக்ஷன், கமிஷன், கலெக்ஷன் இதன் அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் அமைச்சர்கள் மீது லட்ச ஒழிப்புத் துறை நடவடிக்கையை முடிக்கிவிட்டுள்ளது வேலுமணி வீட்டில் சோதனை நடத்தி சிக்கிய ஆதரங்களின் அடிப்படையில் பலவிதமான ஊழல்களுக்கு முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது தமிழ்நாடு லஞ்சஒழிப்புத்துறை வேலுமணி வீட்டில் நடந்த சோதனை குறித்த தகவல் முன்கூட்டியே கருப்பு ஆடுகள் மூலம் தகவல் சென்றதாகவும் அதன் மூலம் ஆதாரங்களை வேலுமணி அப்புறப்படுத்தி விட்டார் என்பதும் வதந்திகள் பரவினாலும் வேலுமணி மீதான வழக்கு ஊழல் குறித்து அடிப்படை ஆதாரங்களை காவல்துறை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஊழல் குறித்த விசாரணை தனி நீதிமன்றத்தில் நடைபெற்றால் குறைந்த பட்சம் இரண்டு மாதம் அதிகபட்சம் மூன்று மாதம் இதற்குள் தீர்ப்பு வெளியாகி தண்டனை அறிவிக்கப்பட்டால் முன்னாள் அமைச்சர் வேலுமணி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். அதுமட்டும் அல்லாமல் அதிகபட்ச தண்டனை கிடைத்தால் வருகிற ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வேலுமணி இழக்க நேரிடும்.

இப்படி பல முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் பல தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் வாய்ப்பு உருவாக்கப்படலாம். குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஊழல்களும் அம்பலப்படுத்தப்பட்டு கைதாகும் சூழலை உருவாகலாம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவின் திட்டம் சுலபமாக நிறைவேறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கிறார் சசிகலா நடராஜன்.

& டெல்லிகுருஜி