தமிழக மக்களின் நலன் கருதி மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு தமிழகம் வறண்ட பூமியாக மாறும் நிலை ஏற்படும், என்று விஜயகாந்த் கூறி உள்ளார்.
தமிழக மக்களின் நலன் கருதி மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

More Stories
உத்திரப்பிரதேசத்தைப் பார்த்தாவது திருந்த வேண்டும்!
கி. வெங்கட்ராமன் பொதுச் செயலாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கம்
அறுவடை செய்யப்பட்ட நெல்லில் 40% கூட கொள்முதல் செய்யப்படவில்லை: உழவர்களை கொல்லாமல் கொல்லும் திமுக அரசு! – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்
தேர்வை வெல்வோம்..! வாழ்வில் உயர்வோம்..!
மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல்கள்..!
அமைச்சர் சிவசங்கர்
சத்தம் இல்லாமல் சாதனை…!