July 18, 2024

திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் தீராத பெண் சிசு கொலை

பெண் குழந்தைகள் சாபம் அல்ல! அவர்கள் வரம் என்று புரிந்துக் கொண்டு தாய்மார்கள் வரவேற்க வேண்டும். மாறாக கள்ளிப் பால் கொடுத்து பிறந்த குழந்தையை கொள்ளும் பழக்கம் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள குள்ளநேரியை சேர்ந்த வைரமுருகன் மற்றும் சௌவுமியா தம்பதிகளுக்குப் பிறந்த இரண்டாவது பெண் குழந்தையை வீட்டின் அருகிலேயே புதைத்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் குழந்தை பெண் குழந்தை என்பதால் இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் இந்த கொடுமை கடந்த மாதம் சு&ம் தேதி நிகழ்ந்துள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரித்த போது பெண் சிசு கொலை என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரிந்தவுடன் வேதனையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். குழந்தையின் தந்தை வைரமுருகன் மற்றும் தாய் சௌவுமியா குழந்தையின் தாத்தா சிங்கதேவர் ஆகிய மூன்று பேர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் எருக்கம்பால் கொடுத்து பெண் சிசுவை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

பெண் குழந்தையை பெற்றோரே கொன்று புதைத்துள்ளது அனைவரது இதயத்தையும் பகிர வைத்தது. இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு பொள்ளாட்சி இளம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை உசிலம்பட்டி பெண் சிசு கொலை தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் மாறிவரும் நிலையில் பாதுகாப்பு கொண்டாடும் ஆட்சியர்கள் வெறும் எட்டளவில் இல்லாமல் பெண்களையும், பெண் சிசுகளையும் பாதுகாக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் செய்திவெளியிட்டார்.

திராவிட முன்னேற்ற கழகம் திமுக, அதிமுக இரு கட்சிகளும் தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி நடத்திவந்தாலும் தீண்டாமை ஒழிப்பு இரட்டை குவளை முறை பெண் சிசு கொலை பெண்களுக்கு பாலியல் தொல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை பள்ளி ஆசிரியர்களே பாலியல் தொல்லைக்கு உள்ளாகுவது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை கண்டறிந்து காவல்துறை வழக்கு தொடுத்தாலும் குற்றத்தின் எண்ணிக்கை மேலும் மேலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது திமுக பல திட்டங்களை அறிவித்து அதன் மூலம் இதுபோன்ற செயல்களை உருவாக்கப்பட்டது பெண்கள் திட்டம் அதில் சத்தியவாணி முத்து, மணியம்மை, மூவாலூர் ராமமிர்தம், தர்மாம்பாள் ஆகிய பெண்கள் பெயரில் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்திய போதும் பெண் சிசு கொலையும் கள்ளிப்பால் கொடுத்து பெண் -குழந்தைகளை கொலை செய்வதும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நின்ற பாடில்லை. அதே போல் இரட்டை குவளை முறையும் மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் இன்னும் நீடிப்பதாக சொல்லப்படுகிறது. சமூக செயற்பாட்டாளர்களும் சாதி ஒழிப்பு பெண்கள் பாதுகாப்பு களப்பு திருமணத்தை ஆதரிப்பது இரட்டை குவளை முறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற செயல்பாடுகளை தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர் அதற்கு தீர்வு காண்பவராக இதுபோன்ற நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்வதில்லை.,

மாறாக ஒரு சாரரை அதரிடிப்பது இன்னாரு சாரரை எதிர்ப்பதும் அரசியலில் ஒரு கட்சிக்கு ஆதரவு நிலையும் இன்னொரு கட்சிக்கு எதிர்ப்பு நிலையும் எடுத்து வரும் சமூக சீர்பாட்டு அமைப்புகள் தங்கள் பிரச்சாரத்தின் மூலம் சட்டத்தின் துணைக்கொண்டும் இதுபோன்ற மூடநம்பிக்கையை நிரந்தர ஒழிப்பதற்கு எத்தகைய முயற்சியும் அவர்கள் செய்வதில்லை என்பது உசிலம்பட்டி அடுத்துள்ள குள்ளநரியை சேர்ந்த வைரமுருகன் சௌமியா தம்பதிகளின் செயல்பாடுகளும் அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்திருப்பதும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக திராவிட கட்சிகள் ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் இன்றும் நின்றபாடில்லை என்பது இச்சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பும் பெண் சிசு கொலையும் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் தற்போது செயல்பட்டு கொண்டிருப்பது என்பதை தமிழக அரசு விளம்பரப்படுத்தி இதுபோன்ற குழந்தைகள் பிறக்கும் போது அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டால் அரசு தன் சொந்தசெலவில் பராமரித்து வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். இதுபோன்ற தவறுகள் இனி நடைபெறாமல் இருக்க ஆங்கிலேயர்கள் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒருசில சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அல்லது துபாய் நாட்டில் பெண்களுக்கு எதிராக செயல்பட்டால் எத்தகைய நடைமுறையை கையாள்கிறார்களோ அத்தகைய முறையை கையாண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள்.

மரண தண்டயையே இந்தியாவில் செயல்படுத்தக் கூடாது என்பதையே குரல் கொடுக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருந்து வருவதால் பெண்ணியம் பேசும் சமூக ஆர்வலர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் கண்டறிந்து தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கவேண்டும். பெண் குழந்தைகள் பிறப்பது சாபம் அல்ல. அது வரம் என்று புரிந்துக் கொண்டால் நலமுடன் வாழலாம் என்ற நம்பிக்கை விதையை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும். ஆணுக்குப் பெண் சமம் என்று பேசும் அறிவு ஜீவிகள் இதற்காக ஒரு சில மணிதுணிகளை ஒதுக்கி பெண் சிசு கொலையை தடுப்பதற்கும் பெண்களை பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாப்பதற்கும் முயற்சிகள் எடுக்க வேண்டும்.

– டெல்லிகுருஜி