May 26, 2024

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் புதிய ஆட்சி! அதிஷ்டம் அழைக்கிறது ஸ்டாலினை!!

இது கற்பனை அல்ல! மக்கள் உடைய நேரடியான தொடர்பை வைத்துக் கொண்டு மக்களோடு மக்களாக பேசிப் பழகி தெரிந்து அறிந்துக் கொண்ட உண்மை தகவல் ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்து எதிர்கட்சியாக 5 ஆண்டு காலமாக மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வரும் திமுக கூட்டணி கட்சிகள் 100க்கும் அதிகமான இடங்களில் வெற்றிப்பெற்று எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து ஆளுங்கட்சி எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும் மத்தியில் ஆளும் பாஜக அருதி பெரும்பான்மையுடன் தனிப்பெருபான்மையுடன் மத்தியில் ஆட்சி நடத்தி வருவதால் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை அகற்றி விட்டு திமுக ஆட்சியை அமைப்பதற்கு திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் விரும்பவில்லை.

ஒருவேளை அதிமுக ஆட்சியை கவிழ்த்து திமுக ஆட்சி அமைத்திருந்தால் மத்தியில் ஆளும் பாஜக கட்சி பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திமுக கூட்டணியை ஆட்சியை தொடர்ந்து நடத்துவதற்கு பல்வேறு வகைகளில் இடையூறுறாக இருந்திருப்பார்கள் என்பதை எண்ணித் தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பிருந்தும் திமுக தலைமையில் ஆட்சி அமைப்பதை கடந்த காலங்களில் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான முயற்சிகள் மூலம் திமுக தனது கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி களத்தில் இறங்கி தினசரி மக்களோடு மக்களாக பணியாற்றும்படி நேரடி தொடர்பினை ஏற்படுத்தி கொரனா நோய் தொற்று காலத்திலும் அன்றாடம் மக்கள் பணியில் திமுகவினர்கள் ஈடுபட்டு பொதுமக்களுக்கு நிவாரணமாக தங்களால் முடிந்த உதவிகளை மாவட்டந்தோறும் உள்ள திமுக தலைமை நிர்வாகிகள் மூலம் வழங்கி வந்தார்கள்.

மக்களோடு இணைவோம்! என்ற முழக்கம் மற்றும் ஸ்டாலின் வரார்! விடியல் தரப் போரார்! என்கின்ற முழக்கம் தமிழ்நாட்டில் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஒலிக்க தொடங்கியது. இதனால் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் அறிவித்த சில சலுகைகளும் பின்னுக்கு தள்ளப்பட்டு கட்சி தலைமைக்குள் ஏற்பட்டுள்ள முதல்வர் வேட்பாளர் யார் என்கின்ற போட்டியும் அடுத்த முதல்வர் (எடப்பாடி பழனிசாமி) நான் தான் என்ற முழக்கமும் சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா நடராஜன் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டதும் அதிமுக தலைமையிலான ஆட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் இவர்களுடைய ஆதிக்கம் வேட்பாளர் தேர்வு தொகுதிக்கு தேவையான நிதி ஒதுக்கீடு வேட்பாளர்களாக போட்டியிட விண்ணப்பித்தவர்கள், நேர் காணலுக்கு அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி உள்ஒதுக்கீடு வழங்கியது இவைகளுக்கு மேலாக பாஜக கட்சியோடு கூட்டணி அமைத்தது போன்ற விஷயங்கள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழ்நாட்டு பொதுமக்கள் மத்தியிலும் மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை மூன்றாவது முறையாக அமையும் வராய்ப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இழந்துவிடுகிறார்.

கடந்த 2011லிருந்து 2016 வரை எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் திமுக கழகத்தை கட்டுக்கோப்போடு வைத்திருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அவரை தொடர்ந்து கட்சி தலைமை பொறுப்பை ஏற்று சு0பு6 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்கள் உடல் நலம் குன்றியிருந்த போதும் சட்டமன்ற தேர்தலை சந்தித்து 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை பெற்ற திமுக தலைமையிலான கூட்டணி 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று புதுச்சேரி உள்பட 39 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்று ஒரு மாபெரும் சக்தியாக விளங்கி கொண்டிருக்கிறது.

எனவே 2021 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் தோழமை கட்சிகள் உள்பட மற்ற கட்சிகளும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அதிகளவில் வெற்றியை பெறுவதற்கு ஏற்றவாறு தங்கள் வேட்பாளர்களை சரியான முறையில் தேர்வு செய்து வசதி படைத்தவர்களையும் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களையும் வேட்பாளர்களாக அறிவித்து சாதனை படைத்துள்ளது. ஆகவே தேர்தல் முடிவு என்பது மே 2 ஆம் தேதி மாலைக்குள் தெளிவாக தெரிந்துவிடும். தமிழகம் முழுவதும் கிடைத்துள்ள தகவல்களின் படி திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிக அளவில் வெற்றி வாய்ப்பை பெறுவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக சுமார் 180 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி வாய்ப்பை பெறும். அதே நேரத்தில் கூடுதலான இடங்களை பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

அதிமுக கூட்டணி சுமார் 40லிருந்து 60 தொகுதிகள் வரை பெறுவதற்கான வாய்ப்பு மட்டுமே உள்ளது. பல்வேறு புலனாய்வு அமைப்புகளும் அதிமுக மீண்டும் 120 இடங்களை கைப்பற்றும் என்று தங்களது குறிப்புகளை வாக்குப்பதிவுக்கு முன்பும், வாக்குபதிவுக்கு பின்பும் வழங்கியுள்ளார்கள். ஆனால் அப்படி ஒரு நிலை தமிழகத்தில் ஏற்படப் போவதில்லை என்பதை மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிப்படுத்தும். தமிழ்நாட்டில் திமுக தலைமையில் திமுக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றிப்பெற்று ஆட்சியை அமைக்கும் என்பதில் தெளிவாக தெரிகிறது.

மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று கூறியவர்களெல்லாம் வாய் மூடி மௌனம் காப்பார்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்படப் போகும் கோஷ்டி பூசல் தோல்வியால் ஏற்பட்டதில் விரக்தி போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களால் ஏற்படப் போகுதி அதிருப்தி தினகரன் அமமுக, தேமுதிக இரு கட்சிகளால் பிரிந்துப்போன வாக்குகள் இவைகளால் அதிமுகவுக்கு ஏற்பட்ட இழப்பு ஆகியவை குறித்து மிகப் பெரிய அளவில் கோஷ்டி பூசல் உருவாகி சமரசம் செய்வதற்கு சசிகலா நடராஜன் தேவைப்படலாம்.

டெல்லிகுருஜி