சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- * தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2வது முறையாக ஆளுநர் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்; அதை உணர்த்தும் நாளாக இது இருக்கும். * நாள்தோறும் கூட்டங்கள் நடத்தி ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார். * வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்.
- அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகளை கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம். * ஆளுநர் பேசி வந்த கருத்துக்களுக்கு பதிலுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக நான் மாற்ற விரும்பவில்லை. * ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. * மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உண்டு. * மக்கள் நலனுக்காக கொண்டு வரும் மசோதாக்களை கிடப்பில் போடுவதால் பேரவை வருந்துகிறது. * ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்க வேண்டும். * மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு மத்திய அரசு காலம் நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
More Stories
அதிமுக – பாஜக கூட்டணி முறிக்கவும் தயார்..!
செங்கோட்டையன் சமாதானம் நடக்காது
வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இணைய முடியாது…!
எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்…!
நேபாள் துணை பிரதமரை ஆற்றில் தூக்கி வீசிய மக்கள்..!
வாய்ஸ் ஆப் சசிகலா
செங்கோட்டையன் பேட்டி
மனம் திறந்தார் – மர்மம் திறக்கவில்லை…!