இயக்குனர் ஷங்கரின் மகளுக்கும், இளம் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் வருகிற ஜூன் 27-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாம்.
கிரிக்கெட் வீரரை மணக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்
மகள் ஐஸ்வர்யா, மனைவி ஈஸ்வரியுடன் இயக்குனர் ஷங்கர்
ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர்.
இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித்தை தான் ஐஸ்வர்யா மணக்க இருக்கிறாராம். 29 வயதாகும் ரோகித், டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகன் ஆவார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விஜய் ஹசாரே தொடரில் புதுச்சேரி அணி கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித், அந்த தொடரில் அதிகபட்சமாக மும்பைக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் அடித்திருந்தார்.
ஐஸ்வர்யா – ரோகித் திருமணம் வருகிற ஜூன் 27-ம் தேதி நடைபெற உள்ளதாம். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு, ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
More Stories
உலக செஸ் சாம்பியன் குகேஷூக்கு பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்
சூர்யாவின் கங்குவா திரைப்பட விமர்சனம்
லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை