பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நேற்று காலை பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் கூட்டம் தொடங்கியது. அப்போது, அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரையிலும், மாநிலங்களவை 2.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More Stories
இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!
முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது