March 28, 2025

ஊரடங்கு நீட்டிப்பா?- நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தலைமைசெயலகத்தில் நாளை காலை 11 மணியளவில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28-ந்தேதி காலை 6 மணி வரை அமலில் உள்ளது. இதையடுத்து ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமைசெயலகத்தில் நாளை காலை 11 மணியளவில், மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.