தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் படிப்படியாக தனியார் மயமாக்கப்படுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை கண்டித்தும் இந்த மசோதாவை வாபஸ் பெறக்கோரியும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் கிளை மேலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
வருகிற 16 மற்றும் 17-ந்தேதிகளில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வங்கிகள் முழுமையாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-
வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் வங்கி சேவை முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளது.
நாடு முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரம் வங்கிக் கிளைகள் மூடப்படும். 10 லட்சம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள்.
தமிழகத்தில் 80 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 75 ஆயிரம் கிளைகள் மூடப்படும். இதனால் வங்கி சேவை முழுமையாக பாதிக்கக்கூடும்.
பல ஆயிரம் கோடி காசோலை பரிவர்த்தனை, ரொக்கம் டெபாசிட் மற்றும் அன்னிய செலாவணி பரிமாற்றம் உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகள் முழுமையாக பாதிக்கக்கூடும்.
இது குறித்து டெல்லியில் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. வங்கி ஊழியர்களின் ஒற்றை கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும். சமரசம் ஏற்படாத பட்சத்தில், வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நாளில் திட்டமிட்டபடி நடைபெறும்.
More Stories
திமுக முப்பெரும் வழங்கும் விழா – விருது பெற்றோரின் போராட்ட வரலாறு:
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு