சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் மாநில தேர்தல் ஆணையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
டாக்டர் அம்பேத்கரின் 130-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் மாநில தேர்தல் ஆணையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியம், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, கே.கே.நகர் வடக்கு பகுதி செயலாளர் மு.ராசா, வட்ட செயலாளர் சின்மயா நகர் லோகு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலரும் சென்று மாலை அணிவித்தனர்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
More Stories
வேளாண் பட்ஜெட் வளர்ச்சிக்கான திட்டங்கள்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு…!
தமிழ்நாடு நிதி நிலையில் திட்டமும் – நிதி ஒதுக்கீடும்…!
தமிழ் பேசு தம்பி…!