பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பை வழங்கி நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இந்த கொடூர சம்பவத்தில், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பண வசதி படைத்த இளைஞர் கும்பல் ஈடுபட்டதாகவும், பெண்களிடம் காதல் வலைவீசி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோ பதிவு செய்து மிரட்டி வந்ததும் விசாரணையில் அம்பலமானதாகவும், இந்த குரூர கும்பலால், பல இளம் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியின்போது வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவத்தால், எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்ததால், இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்ட பின்னர், அதிமுக நிர்வாகியாக இருந்த அருளானந்தம், ஹெரோன் பால், பைக் பாபு உள்ளிட்ட நான்கு பேர் கைதாகினர். கைது செய்யப்பட்ட 9 பேரையும் காணொலி மூலம் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தப்பட்டது. குற்றம்சாட்டப்படவர்கள் மற்றும் 48 சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
More Stories
மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி – அன்புமணி ராமதாஸ்
தயார் நிலையில் இராணுவம்
மோடியிடம் வாலாட்டாதே!
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!
பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா!