April 25, 2024

அறிவுசார் மன்றம்

[responsivevoice_button voice=”Tamil Male”]‘அறிவுசார் மன்றம்‘ (கிவி) என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நீதித்துறை, நிர்வாகத்துறை, காவல்துறை மற்றும் தொழில்துறை, மருத்துவம் பத்திரிகைத்துறைச் சார்ந்த முன்னணி நபர்கள், அரசு பணி ஓய்வுபெற்றவர்கள் உறுப்பினராக அங்கம் வகிப்பார்கள்.

இவைத் தவிர பிரபலமான பலதுறை சார்ந்த வல்லுநர்கள், பன்முகத்தன்மை அறிஞர்கள் அவ்வவ்பொழுது சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள். இவைத் தவிர பிரச்னைகளின் அடிப்படையில் அரசியல் பிரபலங்களும் அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு அழைக்கப்பட்டு மத்திய மாநில அரசின் கவனத்திற்கு தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டி ஆலோசனை கூட்டம் நடைபெறும் காலங்களில் பங்கேற்பார்கள்.

பொதுவான செயல் வடிவம், கிராமங்களுக்கு தேவையான வளர்ச்சி குறித்து விவாதிப்பது, பொதுமருத்துவ முகாம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவது. தொழில்துறை சார்ந்த ஆலோசனை வழங்குவது, கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சிறுவர், சிறுமியர்கள் பாதுகாப்பு, அரசின் வரிவிதிப்பு, விலைவாசி உயர்வு கட்டுப்படுத்துதல், விவசாயம் தொடர்பான கருத்து பரிமாறுதல், கருத்தரங்கம் நடத்தி விவசாயிகளை ஊக்கப்படுத்துதல், ஆகிய மேற்கொண்ட அனைத்துதுறை சார்ந்த தொடர் பணியினை செவ்வனே செய்து தேசநலன், நாட்டு நலன் இந்திய இறையான்மைக்கும் ஒற்றுமைக்கும் வழி தேடல்களை உருவாக்கி, பொதுநலன் காத்து மக்கள் சேவை செய்து அரசியல் கட்சி செயல்களில் ஈடுபடாமல் சார்பற்று ‘அறிவுசார் மன்றம்‘ செயல்படும்.

குறைந்த அங்கத்தினர்களை கொண்டு, நிறைவான சேவை செய்து மக்கள் மனதில் அடையாளப்படுத்துதல், போன்ற பணியினை தொடர்ந்து செயல்படுதல் அறிவுச்சார் மன்றம் நோக்கம். இந்த மன்றத்தின் தொடக்கவிழா முதல் நான் ஆலோசனைக் கூட்டம்

டி.என்.சி. நிறுவனம் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் ஆதிமூலம் ஐ.ஏ.எஸ்(ஸி), சந்தானம் ஐ.ஏ.எஸ்.(ஸி),நீதிபதிகள் சம்பந்தம், பூபாலன், காவல்துறை சார்பில் அறிவுச்செல்வன் ஐ.பி.எஸ்., உள்பட பலர் பங்கேற்றனர். இன்ஜினீயர் சம்பந்தம் பத்திகையாளர் பன்னீர்செல்வம், தொழிலதிபர் ஜெய்சங்கர், இரயில்வே பாஸ்கரன் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தனர்.டி.என்.சி. நிறுவனம் சார்பில், தேனீர், சிற்றுண்டி ஏற்பாடுகளை ப்ரித்விராஜ்வர்மா செய்து வழங்கினார். மக்கள் அதிகாரம் ஆசிரியர் இராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு “விஷன் 2020” குறித்து ஆலோசனை வழங்கினார். உடன் பாரதிய ஜனதாவை சேர்ந்த சாய்சுரேஷ் பங்கேற்றார்.

– ஆர்.பி.