சென்னை: பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டி கூறினார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு இன்று காலையில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார மந்திரி கிஷன் ரெட்டி வந்தார். கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் சன்னதிகளில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சில கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை வந்து உள்ளேன். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிறந்த பாரம்பரிய, வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும். இங்கு பாரம்பரிய கட்டிடக்கலையை விவரிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு மிக்க சிலைகள் அமைந்துள்ளன.கோசாலை போன்றவையும் உள்ளது. இக்கோவிலுக்கு வெளி மாநிலத்தவர்கள், வெளி நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். இந்த கோவிலை பார்த்து வியந்து செல்கிறார்கள். மற்ற நாடுகளை விட தமிழ்நாடு கோவில் கட்டுமானத்தில் முதலிடத்தில் உள்ளது. உலகத்தில் மற்ற மாநிலங்களை விட பல பழமையான கோவில்களை தமிழகம் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும். பல சிறப்பு மிக்க கோவில்கள் அமைந்து உள்ளன. பழமையான கோவில்களை முறையாக பராமரித்து வருகின்றனர். இங்கு இருக்கும் பழங்கால சிலைகள் திருடப்பட்டு வெவ்வேறு நாடுகளில் கிடைக்கப் பெற்றது, அதனை அந்தந்த கோவில்களில் மத்திய அரசு கொண்டு சேர்க்கிறது.தமிழகத்தில் பழமையான கோவில்களை பாதுகாக்க போதுமான நிதியை ஒதுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
More Stories
திமுக முப்பெரும் வழங்கும் விழா – விருது பெற்றோரின் போராட்ட வரலாறு:
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு