கடந்த 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகள் ஆட்கியில் நடைபெற்ற பல சம்பவங்கள் பொதுமக்களையும், இளைஞர்களையும் குறிப்பாக பெண்களையும் பல இன்னல்களுக்கும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் ஆட்படுத்தியுள்ளது. இதனால் ஆண், பெண் பாகுப்பாடு இன்றி மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். எங்குப் பார்த்தாலும் அச்சப்படுகின்ற செய்திகள் ஆச்சரியத்துடன் பார்க்க வேண்டிய சூழல் உருவாகிறது. குறிப்பாக சிறு குழந்தைகள் முதல் கல்லூரி பெண்கள் வரை வயது வித்தியாசம் பாராமல் பாலியல் தொல்லைக்கு ஆளாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக பல்வேறு தகவல்கள் ஊடகங்கள், தொலைக்காட்சிகள் வாயிலாக காணமுடிகிறது. பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் வன்முறையை கையாளுவதும் அவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தும் போது இது ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. குற்றம் வெளிப்பட்டவுடன் குற்றவாளிகள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். பிறகு அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
இப்படி சமீபத்தில் இரண்டு வழக்குகளில் சிவசங்கர் பாபா, மற்றும் ராஜகோபாலன் இருவரும் பாலியல் குற்றத்திற்காக கைசெய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இருந்தாலும் பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் புகார்கள் ஒரு தொடர்கதையாகவே வந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் ஓடும் பேருந்தில் நடைபெற்ற சம்பவத்தில் நிர்பயா என்ற பெண் காமகொடூரர்களால் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு உலகையே உலுக்கியது. பெண்கள் சமுதாயத்திற்கு புதிய பாதுகாப்பு இல்லாததே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்று பல திசைகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்தது. இந்திய அரசாங்கம் இதை கவனத்தில் கொண்டு பெண்களுக்கு உண்டான பாதுகாப்பு சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது.
ஆனால் அதற்குப் பிறகும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பாலியல் வன்முறைகள் ஆரம்ப பள்ளியில் தொடங்கி உயர்கல்வி கூடங்கள் மற்றும் கல்லூரிகள் போன்றவற்றில் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கிறது. சமீபத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிய மருத்துவர்கள் (பெயர்கள் தவிர்க்கப்படுகிறது) சக மருத்துவர்களுடன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் செய்யப்பட்டு புகாருக்கு ஆளானவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது ஒருபுறம், இன்னொருபுறம் பு0 வயது பு5 வயது பு8 வயது இளைஞர்கள் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இளைஞர்கள் திருட்டு பழக்கத்திற்கு அடிமையாகி போதை பழக்கத்திற்கு ஆட்க்கொண்டு திருடுவதை தொழிலாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த இளைஞர்கள் கொலையும் செய்ய துணிந்துவிட்டார்கள் என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதன் விளைவு காவல்துறையின் பணியாற்றி எஸ்.எஸ்.ஐ.சப்இன்ஸ்பெக்டர் பூமிநாதன் திருடர்களை பிடிக்கச் சென்ற போது கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடையும் அளவிற்கு கொடூரமாக வெட்டி கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பார்க்கும் பொழுது மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதற்கு காரணம் கல்வியில் கவனம் செலுத்துவதை விட திருடுவதிலும், திருட்டு தொழிலிலும் கொலை செய்வதிலும், ஈடுபாடு கொண்டு போதைக்கு அடிமையாகி வேலை கிடைக்காமல் கொலை செய்கின்ற அளவிற்கு சீர்கேட்டு கிடக்கிறார்கள். சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு, குறுக்கு வழியில் பொருள் ஈட்டுவதில் தங்களது முழு நேரத்தையும் கவனத்தையும் செய்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பான செயல்களை கூட சட்டத்தின் துணையோடு செய்வதாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு பல்வேறு விதமான தவறான செயல்களில் மசாஜ்சென்டர், மனமகிழ் மன்றங்கள் போன்ற பெயர்களில் பல்வேறு விதமான சட்ட விரோத செயல்கள் மூலம் தடைசெய்யப்பட்ட தொழிலை கூட செய்து பணம் சம்பாதிக்கின்ற ஒரு கூட்டம் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அரசாங்கத்தின் சட்டத்தால் தண்டிக்கப்பட முடியாத அளவு உயரத்திற்கு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது இவைகளை பார்த்து வருத்தப்படாமல் இருக்க முடியாது.
இத்தகைய செயல்களை தட்டிக்கேட்பதற்கு ஒருசில பொது சேவகர்களும், அரசியல் பிரமுகர்களும் காவல்துறை அதிகாரிகளும் முயற்சிக்கும் பொழுது அவர்கள் கூட தண்டிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு கூட கிடைப்பதில்லை. கள்ளச்சாராயம் விற்பது, கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பதும் பான்பராக், குட்கா, அழகிகளை வைத்து வியாபாரம் செய்வது இப்படி பல தொழில்கள் சட்ட விரோதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பெரும் கவலைக்குரிய விஷயமாகும்.
சட்ட ஒழுங்குக்கு சவால் விடும் அளவிற்கு இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒருவிதமான துணிச்சலும் ஒருதலை காதலும் போதைக்கு அடிமையாவதும் அரசியல் கட்சிகளின் பின்புலத்தை அடைக்கலம் ஆவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம். அரசாங்கமும், அரசு நிர்வாகமும், காவல் துறையும் விழிப்புடன் நின்று இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கும் பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கும் உத்தரவாதம் அளிக்கவேண்டும். சட்டத்தை மீறுவோர் தண்டிக்கப்பட வேண்டும்.
வேலியே பயிரை மேய்தல் கூடாது..-
– டெல்லிகுருஜி
More Stories
2026 தேர்தல் – திமுக குழு ஆலோசனை
வன்னியகுல சத்ரிய நலவாரியம்
ஐ.நா. மனித உரிமை பேரவை
சுவிட்ஜர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது