September 26, 2023

வன்னியர்கள் உள்ஒதுக்கீடு 10.5 சதவிகிதம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டி முதல்வருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பி வைக்கப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் தரவுகளை திரட்டும் பணிக்கு தமிழக அரசு மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும், மாநில பணியாளர் தேர்வாணையத்திற்கும் பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கும், தகவல்களை திரட்டி தரும்படி உத்தரவிட்டிருப்பதாகவும், வரும் மே மாதம் 31 ஆம் தேதிக்குள் வன்னியர் ஒதுக்கீட்டு பிரச்சனையில் மாநில அரசு ஒரு முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கை வன்னியர் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு உரிய தீர்வினை மாநில அரசு எட்டவில்லையென்றால் தகுந்த நேரத்தில் வன்னியர் இயக்கங்கள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போராட்டம் நடத்துவது எப்படி என்பதை பொதுவெளியில் அறிவிக்க கூடும்.