துக்கத்தை அனுசரிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு துண்டு அணிந்தபடி ராணுவ அதிகாரிகள் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினார்.
குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது.
அதன்பின் இன்று காலை 10.40 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் உடல்கள் வெலிங்டன் ராணுவ மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
துக்கத்தை அனுசரிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு துண்டு அணிந்த படி ராணுவ அதிகாரிகள் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினார்.
More Stories
2026 தேர்தல் – திமுக குழு ஆலோசனை
வன்னியகுல சத்ரிய நலவாரியம்
ஐ.நா. மனித உரிமை பேரவை
சுவிட்ஜர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது