[responsivevoice_button voice=”Tamil Male”]கண்ணாயி தன் வீ ட்டுக்காரனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். பொழுது இருட்டி ஒரு நாழிக்கு மேலாகிறது. அடுப்பில் வெறும் தண்ணியோடு பானை கொதித்து அடங்கிவிட்டது. இத்தனை நேரத்துக்கெல்லாம் வந்து விடும் துரை நேற்றுபோலவே இன்றும் இன்னும் வரவில்லை. கண்ணாயி கவலையோடு வழியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். “இந்த மனுஷன் இனிமேல் எப்போ வந்து மார்க்கெட்டுக்குப் போயி வித்துட்டு அப்புறம் அரிசி வாங்கறது” என்ற கவலை கலந்த சிந்தனையோடு அமர்ந்திருந்தாள்.
அந்த நேரத்துல “வயித்துல ஒரு பூச்சி பொட்டு இல்ல. இவளப் போய் கட்டியார்ந்திருக்கான்” என்று திட்டிக் கொண்டிருந்து விட்டு செத்துப்போன தன் மாமியாரை நினைத்துக்கொண்டாள். நல்லவேளை குழந்தை குட்டி எதுவும் இல்லை. அப்படி ஒருவேளை இருந்திருந்தா இன்னைக்கு என்ன பண்றது. அம்மா பசிக்குது சோறுன்னு கேட்குமே. எங்கப் போய் கேட்கறது? அது தலையில கட்டவா இ ராத் தி ரி க் கு ஒரு வேளையும் காலையிலே கொஞ்சம் பழங் கஞ்சியையும் சாப்பிட்டு மற்ற நேரம் சும்மா கிடக்க முடியுமா? இப்படி மலடியாகவே இருக்கிறது நல்லது என்று எண்ணிக்கொண்டிருந்த போது துரை சோர்ந்த முகத்தோடு வந்தான்.
என்னங்க வெறுங்கையோடு வந்திருக்கீங்க! ‘ம்… வெங்கையோடவா?
ஏன் இதோ வலையிருக்கே!’ ‘அதுசரி மீனு எங்கே? ‘ம்… வழியிலே நானே மார்க்கெட்டுல வித்துட்டு வந்துட்டேன். அடிபோடி பைத்தியக்காரி ஏதோ சொல்லி வச்சு போராட்டம் நடத்துற மாதிரி, ஒரு மீனுகூட இன்னைக்கு மாட்டல . நேத்துதான் ஏமாத் தி ட் டு து ன் னு பார் த்தா இன்னைக்கும் இப்படியா அண்ட போட்டானுக, அவளுகளுக்குக் கூட
ஒண்ணுமில்லே.
மூலக்கடை செட்டியாரிடமும் நேத்தே கடன் சொல்லி வாங்கியாச்சு. பழைய பாக்கி இதையெல்லாம் சேர்த்து பார்த்துட்டு இனிமேல் காசில்லாம வராதேம்மான்னுட்டாரு எதிர்த்த வூட்டோடு சண்டை. அவ நான் கேட்டா எப்படி அரிசி குடுப்பா. தெரிஞ்சவ பாஞ்சாலி புருவினோடு அம்மாவூட்டுக்கு போயிட்டா. அவ இருந்தாலும் ஏதாவது பிரட்டி குடுப்பா. இப்ப என்னங்க பண்றது நானாச்சும் பரவாயில்லை சேலையை வயித்துல இறுக்கிக் கட்டிகிட்டு படுத்துடுவேன். பகல் பூறா தண்ணில நின்ன மனுஷன் நீங்க என்னா பண்ணுவீங்க…’
‘நம்பகிட்ட வீட்டுல என்னடி இருக்கு அடகு கடையில வச்சு கடன் கேட்க’ ‘ம்ம்.. இதபோல அவசரத்துக்குதவும்னு தான் கழுத்துல ஒ ரு செயின் போட்டிருந்தேன். கூட்டமா சேர்ந்து மீன் வியாபாரம் பண்ணப் போறேன்னுட்டு அதையும் வித்து தொலைச் சிட்டீங்க. இப்ப என்ன இருக்கு. பித்தள தவலை செம்பு எல்லாமே அடகு கடையில தூங்குது ம்ம்…’
‘சரி புள்ளே! இந்த வலையை எடு. பட்டினி கிடந்து சாக முடியாது. இந்த வலையை வச்சுகிட்டாவது ஏதாவது இருபது முப்பது சேட்டு கடையிலே கேட்டுப் பார்ப்போம்.
‘ஏங்க… நாளைக்கு எத எடுத்துட்டுப் போய் மீனு பிடிக்கப் போவீங்க!’
‘அடிபோடி! நாளைக்கு உயிரோட ஒருவேள இருந்தா அப்புறம் அத பத்தி யோசிக்கலாம்!’ என்று கூறிய படியே இருட்டில் நடந்தான் துரை.
சேட்டு வீட்டில் பையன்தான் கடையில் அமர்ந்திருந்தான். பெரிய சேட்டு பக்கத்து டவுனுக்குப் போயிருப்பதாகக் கூறினான். ‘தம்பி! இந்த வலைய வச்சுகிட்டு ஒரு இருவரு ரூவா கொடுப்பா! அப்பாவுக்கு என்னத் தெரியும் ஒரு அர்ச்சண்டுக்காக தேவப்படுது.’
‘வலையெல்லாம் நாங்க வாங்கறதில்லே. ஏதாவது பித்தளை சாமான், நகை இருந்தா கொண்டாந்து கொடுங்க அதுக்கு காசு தர்றேன். இதுக்கு காசு கொடுக்க முடியாது.’
‘தம்பி! கொஞ்சம் பெரிய மனசு பண்ணுப்பா. இப்பவே மணி ஏழரைகிட்ட ஆவுது. நான் சீக்கிரம் வீட்டுக்கு சாமான் வாங்கிட்டுப் போகனும்பா.!’
‘முடியாது! அப்பா வந்தா என்னத்தான் திட்டுவாரு’ தம்பி இது நைலான் வலைப்பா. 20 ரூபாய் தாராளமா தரலாம். நான் வேணும்னா பெரிய சேட்டு வந்ததும் மீண்டும் வந்து பார்த்துச் சொல்றேன். இப்ப கொஞ்சம் தயவு பண்ணுப்பா ‘தொந்தரவு பண்ணாதீங்க. நாங்க என்ன கத்திரிக்கா வியாபாரமா பண்றோம். இப்படிகையில கிடைக் கிறதெல்லாம் வாங்கிறதுக்கு. எதுக்கும் அப்பா வந்துருவார். வந்த பிறகு வேணும்னா கேட்டுப் பாருங்க.
பையன் கடையின் முன்பக்க கதவுகளைச் சாத்திவிட்டு, வீட்டுக்குள் போய் விட்டான். சேட்டு வீட்டுக் கடிகாரம் எட்டு முறை அடித்து ஓய்ந்தது. வலையைக் கீழே போட்டு அதன் மீது துரை குந்தியபடி பெரிய சேட்டுக்காக காத்திருந்தான். பகலெல்லாம் தண்ணியில் நின்றிருந்த களைப்பில் உட்கார்ந்தபடியே தூங்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் மோட்டார் வண்டி சத்தம் கேட்டு கண்விழித்தவுடன், பெரிய சேட்டு டி.வி.எஸ்ஸில் வந்து நின்றார் என்னப்பா யாரு வேணும்.
மீனவத் தெருவுல இருக்கேன்க இந்த வலையை வச்சுக்கிட்டு ஒரு 20 ரூபா கொடுங்க. இன்னைக்கு கையில காசு இல்லீங்க என்ன வலையை வச்சுகிட்டுப் பணமா. அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. இடத்தைக் காலி பண்ணு. பெரிய சேட் டு கோபமாக உ ள்ளே போனார் . நம்பிக்கையிழந்த துரை ‘என்னடா செய்வது?’ யோசித்த போது தலை கிறுகிறுவென்று சுற்ற, வியர்த்துக் கொட்டியது.
பெரிய சேட்டு உள்ள போன கொஞ்ச நேரத்திற்குள், ‘அய்யோ அய்யோ! என்ற குரல் கேட்க அவனையறியாமல் அந்த வீட்டுப் பக்கம் திரும்பிப் போனான். பெரிய சேட்டு கத்திக் கொண்டே ஓடி வந்தார். அய்யய்யோ என் புள்ளைய காப்பாத்துங்க. கிணத்துல விழுந்துட்டான். ஓடிவாங்களேன் என்றபடி தெருவுக்கு ஓடிவந்தார். அதற்குள் கூட்டம் கூடிவிட்டு கிணற்றிற்குள் சேட்டுவின் இரண்டாவது பையன் கயிற்று உருளையிலே மாட்டும் போது விழுந்துட்டான். துரை வேகமாக ஓடினான். தாம்புக் கயிறு ஒன்றை எடுத்து வரச் சொல்லி மடமடவென்று கிணற்றிற்குள் இறங்கினான். பையன் லபக் லபக்கென்று சத்தம் போடுவது மட்டுமே கேட்டது. இருட்டில் வேறொன்றும் துரைக்குத் தெரியவில்லை. ஒரு முழுகு போட்டான் பையன் தலையோடு நீர் மட்டத்துக்கு வந்தான். உள்ளிருந்து சத்தம் போட்டான். பையனைத் தூக்கி தோள் மீது போட்டுக் கொண்டு மூச்சிறைக்க கிணற்றின மேல்பகுதிக்கு வந்தான் துரை. பையனை வாங்கி கீழே கிடத்தி வயிற்றை அழுக்கினார்கள். மயக்கம் தெளியாமல் இருந்த பையனுக்கு சேட்டு மனைவி குஜராத்தியில் பினாத்தி அழுதாள்.
அட வெளிச்சம் விடுங்கப்பா! என்றது ஒரு -கூட்டம். சிறிது நேரத்தில் மூச்சு சுவாசம் திரும்ப ஆ ர ம் பி த் த து . அ ட ªபொழ ச் சி ட்டான் . . . போங்கய்யா… என்று ஒரு கூட்டம் மெல்ல கலைந்தது. ஈரத் துணியோடு நின்ற துரை வலையைத் தேடலானான். துரை வலையை தேடிக் கொண்டிருக்கும் போதே முக்கால்வாசி பேர் போய் விட்டார்கள். வலை ஒரு மூலையில் மிதிக்கப்பட்டுக்கிடந்தது. சேட்டு மனைவி துரை பக்கம் ஓடிவந்தாள். “என் மகன் உயிர மீட்டுக் கொடுத்தது. உனக்கு என்னா வேணும் கேளுப்பா” என்று மழலைத் தமிழில் கேட்டாள். பாவம் துரை என்ன கேட்பான். அந்தப் பெரிய சேட்டக்கு அவனைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன் ஒரு 20 ரூபாய்க்கு கூட மதிக்கப்படாத மனிதன் இப்போது விலையில்லாத தனது மகன் உயிரைக் காப்பாற்றியிருக்கிறானே என்று வியந்தான். மனம் நெகிழ என்னை மன்னிச்சிடுப்பா இந்தா என்று ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். இருந்த போதும் துரை பிடிவாதமாக அந்த வலையைக் கொடுத்துவிட்டு ரூபாய் 20 மட்டும் பெற்றுக் கொண்டு சென்றான்.
More Stories
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்