மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலை முடிந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. மொத்தம் சு94 இடங்களைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு (சு7-ம் தேதி) தொடங்கி, அடுத்த மாதம் சு9-ம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இங்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்குமா அல்லது பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் கட்டமாக 30 சட்டசபை தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. சுபு பெண் வேட்பாளர்கள் உள்படபு9பு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதேபோல், புசு6 இடங்களைக் கொண்ட அசாம் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் இன்று (சு7-ம் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 6-ம் தேதி முடிகிறது.
இங்கு முதல்-மந்திரி சர்வானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சியைத் தொடர்வதற்காக போராடுகிறது. ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இங்கு 47 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.
இந்நிலையில், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
More Stories
வேளாண் பட்ஜெட் வளர்ச்சிக்கான திட்டங்கள்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு…!
தமிழ்நாடு நிதி நிலையில் திட்டமும் – நிதி ஒதுக்கீடும்…!
தமிழ் பேசு தம்பி…!