November 2, 2024

மூலிகை தாவரங்கள்

[responsivevoice_button voice=”Tamil Male”] ஜப்பான் பொதினா, எலுமிச்சை புல்

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“ என்ற சொல்லுக்கேற்ப உடல் ஆரோக்கியத்திற்கு மூலிகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதர்களுக்கு 4448 நோய்கள் இருப்பதாகவும் அவற்றை போக்க, நீக்க 4448 மூலிகை செடிகள் இருப்பதாகவும் சித்தர்கள் சத்தமாக, சுத்தமாக சொல்லியுள்ளனர். உயிர் வளர்க்க உடலை ஆரோக்யமாக வளர்க்க வேண்டும்.

திப்பிலி

Piper Longum) ; Family : PIPRRACEAE

திப்பிலியில் இரண்டு வகை உள்ளது. அவை (பு) அரிசி திப்பிலி, (சு) யானை திப்பிலி. அரிசி திப்பிலி தான் மருந்துகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் Long Pepper அல்லது Indian Long Pepper என அழைக்கப்படுகிறது. இது ஒரு பூக்கும் பல பருவ தாவரம். 60 சதவீதம் நிழல் தேவை. இதனுடைய வேர்கள் உறுதியானதாக இருக்கும் இலைகள் வெற்றிலை போன்று பார்வைக்கு காணப்படும். நிழலுக்கு கல்யாண முருங்கை, வாழை நட்டு பயிரிடலாம்.

ரகங்கள்

1.வெள்ளாணிக்கரா -1 (விஸ்வம் திப்பிலி)

2.பி.எல். – 1- தமிழ்நாட்டிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த செடி நன்கு வளர செம்மண் அல்லது இருமண் கலந்த பொறை மண் உகந்தது. மண்ணில் அதிகம் அங்ககப் பொருள்கள் (Organic meter) இருப்பது அவசியம் மேலும் வடிகால் வசதியுடைய நிலம் தேவை. தமிழகத்தில் சேர்வராயன், கொல்லிமலை, கல்ராயன் மலைப்பகுதிகளில் திப்பிலி சாகுபடி செய்யப்படுகிறது.

திப்பிலியின் மறுபெயர்கள் :

காணாவதி, தேவானதி, காணி, வெலிவாரி, வேகாந்தி, போதகம்.

திப்பிலியின் காய்களில் வெற்றிலை போன்ற காரத்தன்மை உள்ளதால் வாசனையும் இருக்கும். கருமிளகைக் காட்டிலும் திப்பிலியின் காய்களில் காரத்தன்மை மிகுந்திருக்கும். திப்பிலியில் பைப்பரின், லாங்குமான் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளது. மேலும் ரெயின், தையமின், நியாசின், புரதம், சுண்ணாம்பு, இரும்பு, தாதுஉப்பு போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளது.

திப்பிலி செடியிலிருந்து எடுக்கப்பட்ட வேர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கண்ட திப்பிலி என்ற மருந்து பொருளாக பயன்படுகிறது. கனிகள் முதிராத பூக்கதிர் தண்டை உலர்த்தி அரிசி திப்பிலி என்ற பெயருடன் மருந்து பொருளாக பயன்படுகிறது. சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் என்று சொல்லப்படுகிறது. அரிசி திப்பிலியை நன்கு பொடி செய்து சலித்து அதில் தேனும், வெற்றிலைச் சாறும் கலந்து சாப்பிட்டால் இருமல், காய்ச்சல், சளி போன்றவை குணமாகும். மேலும் எலும்புவலி, வயிற்றுபோக்கு, வாத நோய்களையும் போக்கும்.

திப்பிலி நுரையீரல் போன்ற பகுதிகளில் உள்ள சளியை போக்குவதால் திப்பிலியை கோழை அகற்றி என்றும் சொல்லுவர். மூலம் தோல் நோய் சரிசெய்ய உதவுகிறது. திப்பிலி + குப்பைமேனி பொடியை கலந்து சாப்பிட்டால் பவுத்திரம் சரியாகும். கல்லீரல், மண்ரெலில் ஏற்படும் வீக்கங்களை சரிசெய்ய உதவுகிறது. மூட்டு வலியை போக்குகிறது. திப்பிலியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் ஆஸ்துமா, மூக்டைப்பு, சைனஸ் தலைவலியை சரிசெய்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

திப்பிலி 5 பங்கும் + தோற்றான் விதை 3 பங்கும் சேர்த்து பொடி செய்து அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து 3 நாளைக்கு தினமும் இருவேளை குடித்து வந்தால் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது. பசியைத் தூண்டும் தன்மை கொண்டது. தேமலை சரிசெய்யும் திரிகடுகம் கஷாயம் குடித்தால் காய்ச்சல் குணமாகும். திப்பிலியை பொடியாக்கி 1:2 விகிதம் வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும். திப்பிலி பொடியை பாலில் கலந்து சாப்பிட்டால் முப்பிணியையும் நீக்கும்.

இயற்கை மூலிகையான திப்பிலி இருக்க சளித்தொல்லை இனி இல்லை என்பதை உணர்ந்து பயன்படுத்தி பலன் பெறவும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மூலிகை அரிசி திப்பிலி வளர்த்து வளம் பெறவும்.

ஜப்பான் பொதினா Mentha Arvensis : Family Labiatae

இது தொடர் பருவ செடி 60 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது. இலைகள் பொதினாவை போன்று இங்கும் உருவத்தில் இதன் இலைகள் மிருதுவாக இருக்கும். பொதினாவில் சொர சொரப்பு இருக்கும்.

பொதினாவில் Pepper mint, Spear mint, Wild mint, Apple mint, Water mint, Japanese mint போன்று பலவகை உள்ளது.

ஜப்பான் பொதினா ஒரு அரியவகை மூலிகை செடியாகும். இது வளர்க்க குழந்தையை வளர்ப்பது போல் கவனமுடன் வளர்க்க வேண்டும். சாதாரண பொதினா சிறு இலைகள் வெட்டி நட்டாலே வளர்ந்து விடும். இதை பதியம் போட்டுத்தான் பயிர் பெருக்க செய்யவேண்டும். இதன் பூக்கன் கத்தரிப்பூ கலரில் இருக்கும்.

பயன்கள்:

1. வாய்க்கு புத்துணர்ச்சி தரும், தூர்நாற்றம் போக்கும்.

2. இருமல், சளி போக்கும்.

3. ஜீரணம் சீரடையும்.

4. வாயுவை போக்கும்

5. தொண்டை கரகரப்பு நீங்கும்

6. கல்லீரலை பலப்படுத்தும்

7. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.

தினமும் உணவு உண்டவுடன் இரண்டு இலையை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் மேல் சொன்ன பல நன்மைகளை அடையலாம்.

எலுமிச்சைப் புல் (Lemon Grass)

தாவர இயல் பெயர்: Cymbogon Citratus இது ஒரு விதை இலை தாவரமாகும். புல் மாதிரி வளருவதால் இதை எலுமிச்சைபுல் என்று வழங்கப்படுகிறது. எலுமிச்சை வாசனை இலையிலிருந்து வரும். இது ஒரு சிறந்த மூலிகைத் தாவரமாகும். இதை வளர்ப்பது மிகவும் சுலுபம், விதையிலிருந்தும், புல் தூர்கள் மூலமும் பயிர் அபிவிருத்தி செய்யலாம். நல்ல வெயிலில் நன்கு வளரும் நட்ட மூன்று மாதத்தில் இலைகளை பயன்படுத்தலாம். இதை வீட்டில் தொட்டியிலும் வளர்க்கலாம். இதனுடைய இலையில் உள்ள (Citronella) சிட்ரொனைல்லா என்ற எண்ணை கொசு விரட்டியாகவும் தரை சுத்தப்படுத்தவும் வாசனையுடன் வைத்திருக்கவும் எலுமிச்சை புல் எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் இலையிலிருந்து திநீர் (Tea) தயாரித்து பயன்படுத்தலாம். இந்த மூலிகை தீநீரில் பல பயன்கள் உள்ளது.

1. நல்ல ஜுரணம் ஆகும்

2.நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்

3. இரத்த ஓட்டம் சீரடையும்

4. எடை குறையும்

5. உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும்

6. தோல் வளம் கூடும்

7.வாயு தொல்லை போக்கும்

8. உடல் சுறு, சுறுப்பு பெறும் தினமும் ஒரு கப் எலுமிச்சை புல் தீநீர் தயாரித்து குடித்து பயன் பெறவும். கருவுற்ற பெண்களும், குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களும் இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

“மூலிகை தாவரங்கள் இறைவன் கொடுத்த வரங்கள்”