October 11, 2024

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முன்னிறுத்திசாதனைப் பெண் ‘சசிகலா‘ சாதித்தது எப்படி…?

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சசிகலா சாதாரண குடும்ப பெண்ணாகவே அறிமுகம் ஆகிறார். அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு, இந்த அறிமுகம் தனது கணவர் தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரியான நடராசன் மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா உதவியுடன் சசிகலாவுக்கு கிடைக்கின்றது. திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திய அம்மா ஜெயலலிதா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பாதுகாப்பில் போயஸ் கார்டனில் வசித்து வந்த காலகட்டம். அப்பொழுது அம்மா ஜெயலலிதாவுக்கு மாதவன் என்பவர் உதவியாளராக இருந்து வந்தார்.இவர் அம்மா ஜெயலலிதா அவர்களின் தாயார் காலத்திலிருந்தே உடன் இருப்பவர் சிறுவயது ஜெயலலிதாவை பாதுகாப்பது முதல், வீட்டில் உள்ள அனைத்து பணிகளையும் செய்து வந்தார்.

கிட்டதட்ட இவர் மேனேஜர் அந்தஸ்தில் இருந்தவர். பு980 ஆம் ஆண்டு அம்மா ஜெயலலிதா தனது அரசியல் பயணத்தை தென்னாற்காடு மாவட்டம் கடலூர் நகரில் உள்ள திடலில் நடந்த மகளிர் மாநாடு பொதுக்கூட்டம் நிகழ்ச்சி மூலம் தொடர்கிறார்.அந்த காலகட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்து வருகிறார். மாவட்ட ஆட்சித் தலைவராக சந்திரலேகா (ஐ.ஏ.எஸ்) இருந்தார். அவரின் கீழ் பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர் நடராசன். இதன் மூலம் அம்மா ஜெயலலிதா நட்பை பெறுவதற்கு சந்திரலேகா சிபாரிசு பெற்று அறிமுகமாகிறார்.கடலூர் நகரில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் எம்.ஜி.ஆர் ஆட்சி நடைபெற்ற காலம். மக்கள் தொடர்பு அதிகாரி பணியை பயன்படுத்தி, விடியோ கவரேஜ் செய்யும் பணிக்கு அனுமதி பெறுகிறார். அன்றிலிருந்து அம்மா ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்கூட்டம் நிகழ்வுகளை வீடியோ படம் எடுத்து வழங்கும் பணியை சிறப்பாக நடத்துகிறார் சசிகலா!நடராசன் அவர்களின் அரசியல் திட்டத்தை நிறைவேற்ற தனக்கு ஏற்ற நம்பிக்கைக்கு உரியவராக தனது மனைவி சசிகலாவை தேர்வு செய்கிறார்.

இதன் தொடக்க நிகழ்வாக ‘விடியோ கேசட்’ போயஸ் கார்டனில் உள்ள அம்மா ஜெயலலிதாவுக்கு வழங்குவதற்கு சசிகலா மூலம் அனுப்பி வைக்கிறார் இந்த வழக்கம், நாளடைவில் பழக்கமாக மாறுகிறது. பிறகு அதுவே நட்பாக மலர்கிறது. போக போக தோழியாக மாற்றப்படுகிறார்.வீடியோ கேசட் வழங்க போயஸ் தோட்டம் வந்தவர் போயஸ் தோட்டம் அம்மா ஜெயலலிதா வீட்டின் அங்கத்தினராக மாறுகிறார். தினசரி போயஸ்கார்டன் வந்துச் சென்றவர், அம்மா ஜெயலலிதாவுடன் போயஸ் தோட்டம் இல்லத்தில் தங்குகிறார். ஒரு ப்ளாஷ்பேக் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆதரவுடன் இந்த நிகழ்வு நடப்பதாகவும் பின்னாளில் ஊடகங்கள் மூலம் செய்தி வெளியிடுகின்றது.

நடராசன் அரசியல் அதிகார திட்டம் இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது.காலம் கடந்து அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் விழித்துக் கொண்டு எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு கட்சி, ஆட்சியை தக்கவைக்காமல் பதவி சண்டையில், நீயா! நானா போட்டி, ஆட்சி கட்சி இரண்டும் அம்மா ஜெயலலிதா வசம் கொண்டு வரும் பணியை நடராசன் மிக அழகாக சசிகலாவை பயன்படுத்தி அம்மா ஜெயலலிதாவை தங்கள் பக்கம் ஈர்த்து மூத்த தலைவர்களை கட்சியில் இருந்து வெளியேற்றி, முதல்வர் ஆசையை உருவாக்கி, அதிமுக கட்சி மற்றும் அம்மா ஜெயலலிதா இருவரும் இப்பொழுது நடராசன் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற புறத்தோற்றம் கட்டமைக்கப்பட்டு கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம் முதல், போயஸ் தோட்டம் நிர்வாகம் முழுவதும் நடராசன் ஆலோசனையின் பெயரில் மன்னார்குடி ஆட்கள் கார்டனில் புகுத்தப்பட்டனர். முக்கிய பிரமுகர்கள் சசிகலா சகோதரர் திவாகரன், அக்கா மகன் தினகரன் ஆகியோர் முன்னணி பாதுகாவலர்களாக உருவெடுத்தார்கள்.

அரசு செய்தி துறையில் பணியில் இருந்ததினால் அரசு நிர்வாக குறிப்புகள், செய்திகள் நடராசன் கைக்கு சுலபமாக கிடைத்துக் கொண்டு இருந்தது.அம்மா ஜெயலலிதா அரசியல் ஆலோசகராக நடராசன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். கட்சி பதவி தங்கள் விரும்பும் நபர்களுக்கு விருப்பம் போல் வழங்கப்பட்டது பலரது பதவி பறிக்கப்பட்டு புதியவர்கள் நிர்வாகியாக புகுத்தப்பட்டார்கள். ஜெயலலிதா பற்றி செய்தி வேண்டி தினசரி செய்திதாள், வார இதழ் நிருபர்கள், நடராசன் இல்லத்தில் காத்திருப்பார்கள், பரபரப்பு செய்தி வெளியிட்டு தமிழக மக்கள் மனதில் சசிகலா நடராசன் பெயர் பிரபலப்படுத்தப்பட்டது. இதற்கு பிரபல வார இதழ் நடராசனுக்கு பெரும் துயைாக செயல்பட்டது.

இதனால் தோழி, உயிர்தோழி உடன்பிறவா சகோதரி, அன்பு சகோதரி என்ற அடைமொழி, உருவாக்கப்பட்டது. இதனால் பிரிக்க முடியாத நட்பு, அம்மா ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் நெருக்கம் உருவாக்கப்பட்டு அதிமுகவினர் மத்தியில் சசிகலா தயவு இருந்தால் அல்லது நடராசன் ஆதரவு இருந்தால் மட்டும் கட்சியில் பதவி கிடைக்கும் என்ற நிலையை, ஊடகங்கள் நாளேடு வாரஇதழ், மாத இதழ் ஏன் ஆங்கில ஏடுகள் உள்பட அனைத்தும் செய்தி வெளியிட்டு நம்பகத்தன்மையை ஏற்படுத்திவிட்டார்கள்.இதுவே பிற்காலத்தில், அம்மா ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றதிலிருந்து, சசிகலா ஆதிக்கம் போயஸ் கார்டனில் கொடி கட்டி பறந்தது. உறவினர்கள், இளவரசி சுதாகரன் உள்பட பலர், போயஸ்கார்டன் முகவரியில் ரேஷன் அட்டை முதல் வாக்காளர் அட்டையில் பெயர் உள்பட பதியப்பட்டது. பிறகு வளர்ப்பு மகளாக சுதாகரனை தேர்வு செய்தார். கோடிக்கணக்கான சொத்துக்கள் சேர்ந்தது.

தினசரி வரவு உயர்ந்தது. அரசு அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் முதல் சசிகலாவை நாடினார்கள் பதவி உயர்வு விரும்பும் இடத்திற்கு இடம் மாற்றம் தாராளமாக பரிமாறப்பட்டது. கட்சியில் பலர் புதியவர்களாகவும், பழையவர்கள் பதவி இழந்தவர்களாகவும் மாறினார்கள். அம்மா ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போயஸ் தோட்டம் திரும்பாமலே இறந்துவிட்டார். இன்று வரையில் அம்மா ஜெயலலிதா சொத்துக்கள் எங்கே? கேள்வி கேட்க ஆட்கள் இல்லை. அண்ணன் பிள்ளைகள் வாரிசு என்று தீபக், தீபா இருவரையும் நிதிமன்ற அறிவுத்துள்ளது. பெங்களூர் சிறையில் சசிகலா இளவரசி சுதாகரன், நான்கு ஆண்டுகள் சிறைவாசம் கழிந்து விடுதலையை எதிர்நோக்கும் விசுவாசிகள்.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி தர காத்திருக்கிறார்கள்.ஆனால் சசிகலா ஆட்சி கவிழ்ப்பு பணியில் ஈடுபட விரும்பமாட்டார். மாறாக அதிமுக என்ற கட்சியை கைபற்றுவதில் தனது கவனத்தைச் செலுத்துவார். இதற்காக அவர், கட்சி ஒற்றுமையை வலியுறுத்துவார். அதன் மூலம் அதிமுக தொண்டர்களின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெற முயற்சிப்பார். இதற்காக தனது குடும்பத்தார்கள் உறவை கூட ஒதுக்கிவைத்து தனிமையை நாடுவார்.போயஸ் தோட்டத்தின் எதிரில் சசிகலாவுக்கு பிரமாண்டமான பங்களா தயாராகிறது. அம்மா ஜெயலலிதா சொத்துக்கள் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு விதத்தில் சசிகலா, அல்லது அவரது உறவினர்கள் பங்குதாரர்களாக இருப்பார்கள். மீண்டும் அதிமுகவை சசிகலா தன் வசம் மீட்டு எடுப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட எல்லாவற்றிர்க்கும் அச்சு ஊடகங்கள் முதல் காட்சி ஊடகங்கள் சசிகலாவை முன்னிறுத்தி விவாதம் நடத்துகிறது. காத்திருப்போம்! எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் இருவர் நிர்வாகம் சசிகலாவுக்கு எதிராக செயல்படுமா? அல்லது சரண்டர் ஆகிவிடுவார்களா?