புதுச்சேரி மாநிலத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்குள்ளான நேரத்தில் இயற்கை சீற்றத்தினால் -ஏற்பட்ட பாதிப்பை களைவதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்.ரங்கசாமி முயற்சி செய்து மத்திய அரசுக்கு கோரிக்கை மூலம் உடனடியாக 300 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்றார். இதற்கு முன்பாக இருவிதமான வண்ணம் பொறித்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அனைவருக்கும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பும் வெளியிட்டார். ஆனால் யூனியன் பிரதேசத்தில் முதல்வரை விட அதிகாரம் படைத்தவராக தலைமைச் செயலாளர் துணைநிலை ஆளுநர் ஞிமீஸ்மீறீஷீஜீனீமீஸீt சிஷீனீவீsவீஷீஸீமீக்ஷீ இருப்பதினால் முதல்வரை கலந்து ஆலோசிக்காமலேயே புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளர் சு0 கோடி ரூபாய் நிதி வழங்கினால் போதும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். இதன் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகையும் ரொக்கப் பணமும் கிடைக்கக் கூடாது என்று தனது நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் நலத்திட்டத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டுள்ளார். இதை அறிந்த பொதுமக்கள் தலைமை செயலாளரை முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். இத்தனைக்கும் -புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சி பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் இணைந்து நடத்திக் கொண்டிருக்கும் கூட்டணி ஆட்சி என்பதைக் கூட தலைமை செயலாளர் மறந்துவிட்டு ஏன் இப்படி முட்டுக்கட்டை போடுகிறார் என்பது தெரியவில்லை.
முதல்வர் இவர் மீது உள்ள கோபத்தினால் பொதுமக்கள் ஆகிய நாங்கள் பாதிக்கப்பட வேண்டுமா? என்ற கேள்வி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது புதுச்சேரி மாநிலத்தில். புதுச்சேரி மாநில நிர்வாகப் பொறுப்பை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சகமும் தலைமை செயலாளர் குளறுப்படியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. கூட்டணி தர்மத்தை நிலை நிறுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு அதிகாரத்தை வழங்கி மக்களுக்கு நலத்திட்டங்களை விரைவாக வழங்குவதற்கு மாநில முதல்வரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நிவாணை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் புலம்பலாக உலா வருகிறது.
முதல்வர் ரங்கசாமி கடந்த கால ஆட்சியில் இருந்த பொழுது காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு எதிராக முன்னாள் முதல்வர் நாராணசாமி -கூறியதை கேட்டு ரங்கசாமி எதிராக திட்டமிட்டு செயல்படுவதற்காக துணைநிலை ஆளுநராக அனுப்பி வைக்கப்பட்டவர் தான் கட்டாரியா. அவர் புதுச்சேரி மாநிலத்தை விட்டுப் போகும் போது அழுதுக்கொண்டே சென்றார். அப்பொழுது முதல்வராக இருந்தவர் என்.ஆர்.ரங்கசாமி அவர்கள்.
– டெல்லிகுருஜி
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…